மனிதனெனும் மிருகம்
மூப்படைந்த இவ்வுலகில் பின்பிறந்து முன்னுயர்ந்தான்!முன்பிறந்த உயிரையெல்லாம் கொன்றழித்து தான்வளர்ந்தான்!
மாபெரும் மிருகமிவன் மனிதனென அழைக்கலானான்!
பசிக்காக இரைதேடித் திரிந்திருந்தான் காட்டினிலே! பின்
ருசிக்காக இரைதேடித் திரிகின்றான் நாட்டினிலே!
அவலத்தின் அர்த்தமேந்தி அவனியிலே அலைகின்றான்!
அன்புடையோர் அனைவருக்கும்
அல்லலே அளிக்கின்றான்!
பஞ்சமோ பஞ்சமென்று பாரெங்கும் ஒப்பாரி கேட்க!
லஞ்சமோ லஞ்சமென்று ஊரெங்கும் ஊழல் செய்வான்!
மதமெனும் மதம்பிடித்து மண்ணுயிர்க்கு இன்னல் செய்வான்!
கண்ணில்லா காமுகனாய் கன்னியரை சிதைக்கின்றான்!
சிசுவென்றும் பாராது படுபாவி கெடுக்கின்றான்!
இறையென்று பலகற்கள் இங்குண்டு கோவிலிலே!
குறை தீர்க்க ஒன்றில்லை இன்ற்ந்த நாட்டினிலே!!