கொடுத்து வைத்தவர் யார்
[] கொடுத்து வைத்தவர் யார் ...
கொடுத்து வைத்தவர் யார் ..
அவனா அவளா - இது தான்
அவர்களுக்குள்ளான
போட்டி .. விவாதம் .. தர்கம் ..
எப்படியும் கொள்ளலாம் !
ஏனென்றால் அவர்கள் காதலர்கள் ...
தொடக்கத்திலிருந்தே -
ஆண் அமைதியாக இருந்தான்
பெண் பேசிக்கொண்டிருந்தாள் ..!
பூக்கள் பூப்பதே - என்
அழகை வர்ணிக்க தான் என்று
எங்கேயோ படித்த கவிதைகளை எல்லாம்
தன் பேச்சோடு கோர்த்து கொண்டாள் ..
அது அவன் எழுதிய
கவிதையாக கூட இருக்கலாம் !
செதுக்கி வைத்த சிலை ..
எண்ணிலடங்கா விலை ..
ரவிவர்மன் கலை .. என்று
வாலி வைரமுத்துவையும் தன்
வர்ணனையோடு வளைத்து கொண்டாள் !
ஒரு கணம் அமைதியானவள் -
சிரித்து கொண்டே சொன்னாள்..
பதில் பேச இயலாமல் தினரி நிற்கும்
உன் மௌனமே சொல்கிறதே
கொடுத்து வைத்தது நானென்று ...
சுய வர்ணனைகள் ஏதுமின்றி
சுமூகமாக வென்றான் அவளை ..!
அடுக்கி வைத்த அழகெல்லாம்
உன்னில் இருப்பது உண்மையே..
இருந்தபோதும் என்ன செய்ய
அனுபவிக்க போவது இந்த ஆண்மையே !
ஒரு சின்ன மௌனத்திற்கு பிறகு
அந்த மௌனத்தை விடவும் சின்னதாய்
அவள் புன்னகை புரிந்தாள் ..
அந்த புன்னகையில் வெட்கமிருந்தது !
அவனே கொடுத்து வைத்தவன்
என்ற அர்த்தமிருந்தது ...!
[] யாழ் ..