நண்பனுக்கு கடன் கொடுக்காதே

நண்பனுக்கு கடன் கொடுக்காதே என்று
தன்னிடம் பலர் சொன்னதாய் சொன்னான் என் நண்பன்
கடன் கொடுத்தவனாய் மாறிவிட்ட
என் தோழனை மீட்கும் முயற்சியில்
அதி விரைவாகவே கடனை திருப்பி கொடுத்தேன் நான்

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (26-Aug-17, 8:25 pm)
பார்வை : 300

மேலே