தாமாரை எழிலினி

முகத் தாமரையில்
--------------புன்னகை முத்துக்கள்
முகில் கூந்தலில்
--------------முல்லைப் பூங் கொத்துக்கள்
விழித் தாமரையில்
-------------அசையும் காதல் தீபங்கள்
மனத் தாமரையில்
------------விரியும் அந்தியின் மடல்கள்
தாமரை எழிலினியின் அகத்தாமரையில்
-------------மேவிடும் என் மனமலர்க் கவிதைகள் !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Aug-17, 9:46 am)
பார்வை : 130

மேலே