காதலுக்கும் கவிதைக்கும் முதலும் முடிவுமாய்

முத்தங்கள் இவ்வளவு இனிதானது !
முத்தம் தந்த இதழ் இத்தனை மெல்லிதானது !
இதுவரை நான் அறிந்திருக்கவில்லைதான் !

என் கன்னங்களில் கவிதை எழுத நீ செய்த
முதல் முயற்சியா அது !

விரலிடை கோர்த்து நடந்து சென்றதாய்
நீதான் நினைவு படுத்தினாய் எனக்கு !
தென்றல் என் விரல்களுக்குள் சிக்கி கொண்டதாய்
இப்படித்தான் தென்றல் இருக்குமென்றே இதயம்
நினைவில் பதிந்து வைத்து இருந்தது !

விரல்களில் வீணை நாதம் வாசிக்க நீ செய்த
முதல் முயற்சியா அது !

தேன்துளிகள் ஒட்டிக்கொண்டதை அதன் சுவை
தித்திப்பை இப்படிதான் நான் உணர்ந்து கொண்டேன்
முதன் முதலாய் !

இதழ் மீது இதழ் பதித்த முத்தத்தில் ! இதயத்தில்
இடர் ,இன்னல் ,இடி என எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்து
போனது என்பதை நீ அறிந்து இருக்க வாய்ப்பு இல்லைதான் !

தேன் தித்திப்பை உணர்ந்து கொள்ள நீ செய்த
முதல் முயற்சியா அது !

அவ்வப்போது உன் வருகை என்பது எதிர்பாராத நிகழ்வுதான் !
உன் கொலுசின் ஓசைகள் மட்டுமே ..ஸ்வரங்களை
நினைவு படுத்தி போகிறது !

நான் இசை அமைக்க ஏதேனும் நீ செய்யும் முதல்
முயற்சியா அது !

என் காதலுக்கும் கவிதைக்கும்
முதலும் முடிவுமாய்
முற்றிலுமாய் நீயே இருந்து விடேன் !

எழுதியவர் : முபா (27-Aug-17, 9:51 am)
பார்வை : 110

மேலே