காத்திருப்பின் களிப்பு
மனமே என் கனவுகளை அவளின் காலடியில் அடகு வைத்து அழியாத அவளின் நினைவுகளை
சேமித்து மகிழ வைத்தாய்
மகிழந்த தருணங்கள் மாறி மரணித்தாலும்
மறையாத வலியை சுமக்க வைக்கிறாய்
ஒன்று என்னுடன் கைகோர்த்து செல்
அல்லது கைபிடி மண்ணை கல்லறையில் தூவி விட்டு செல்
காத்திருக்கிறேன் காதலுடன் கல்லறையில் உனக்காக
அல்லது மடியில் தவழும் உன் குழந்தையாக பிறக்க