நெஞ்சுக்குள் நீ

என்னங்க
சொல்லடி
இப்படியே உங்கள் மடியில் கண் மூடினால் சுகமாக இருக்கும்...
எனக்கு சுமையாக இருக்கும்.

என்ன
நான் உங்களுக்கு சுமையா ?!
என்று தொடையை பிடித்துக் கிள்ள

ஆ வலிக்கிறதடி
போடி
என்னை புரிந்து கொண்டது அவ்வளவு தானா?!

ஹா ஹா உன்னை நான் அறிவேன்
இஞ்சாருங்கோ...
போடி பாக்கமாட்டேன்...
மாமனுக்கு வெட்கத்தை பாரு...

வெட்கமா
செம கோபத்துல இருக்கேன்.

கன்னத்தில் தன் இதழ்களை பதித்து
நீ என்னை காணவில்லை என்றால்
ஒரு வேளை நான் கண் மூட கூட
வாய்ப்பிருக்கு மாமா...

வாயை பொத்தி
நீ கண் மூடினால்
நானும் உன் மீது
கண் மூடியிருப்பேனடி

ஆரத்தழுவிக் கொண்டாள்...
இறுக்கி அணைத்துக் கொண்டார்...
இருவரின் அன்பு என்றும் பரிசுத்தமானது...
இவர்களின் ஊடல்
இவர்களின் உண்மையான அன்பு...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (28-Aug-17, 8:48 am)
Tanglish : nenjukkul nee
பார்வை : 485

மேலே