போர்க்களம் - 4
பாகம் - 4
சிறையில் நூறுக்கும் மேட்பட்ட கைதிகள் போர் பயிட்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து சமுத்திராவும் போர் பயிட்சியில் ஈடுபட்டான். சிறு வயதிலேயே தன் தந்தை கட்பித்த அனைத்து பயிட்சிகளும் நினைவிலிருக்க, அவனுக்கு அவர்கள் அளிக்கும் போர் பயிட்சி மிகவும் சுலபமாக இருந்தது.
இப்படியே ஒரு மாத காலம் ஓடிவிட, திடீரென்று ஒரு அறிவிப்பு வந்தது. அது என்னவென்றால்,
நாளை ஆர்யவர்தா தீவை நோக்கி போர் புரிய வேண்டும் என்பதே அந்த அறிவிப்பாகும். அறிவிப்பை கேட்டு சில கைதிகள் பயத்தில் புலம்ப தொடங்கினர். சிலரோ அமைதியாக எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மன நிலமையுடன் அமர்திருந்தனர், அதில் சமுத்திராவும் ஒருவன்.
அடுத்த நாள் காலை, அனைத்து கைதிகளும் சிந்து தீவின் எல்லை பகுதியில் நிற்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஒரு ஆயுதமும் ஒரு தடுப்பு ஆயுதமும் மட்டுமே கொடுக்கப்பட்டது. அவர்களின் பின் சில தூரம் தொலைவில் சிந்து தீவின் மற்ற வீரர்கள் கையில் அம்போடு தயாராக நின்று கொண்டிருந்தனர். பின் நகர்ந்தாள் நாம் கொல்லப்படுவோம் என்பது அனைத்து கைதிகளுக்கும் நன்றாகவே தெரியும்.
போரும் தொடங்கியது, ஆர்யவர்தா தீவிலிருந்து மலையென வரும் அம்புகளை தாக்கு பிடிக்க முடியாமல் பல கைதிகள் இறந்தனர். ஆனால் சமுத்திராவோ சாமர்த்தியமாக அம்புகளை தடுத்து முன்னோக்கி நகர்ந்தான். அவன் செய்வதை பார்த்து மற்ற கைதிகளும் அதையே பின் பற்றினர். பின் ஆர்யவதா தீவின் தரைப்படையுடன் போர் நடந்தது. சமுத்திரா எதிரி தீவு வீரர்களை சூறையாடினான். அவனுடைய வேகத்திட்கும் வால் வீசும் திறமைக்கும் முன் எதிரி தீவு வீரர்கள் தாக்கு பிடிக்க முடியாமல் மடிந்தனர். தளபதி மகிசா சமுத்திராவின் போர் புரியும் திறமையை கண்டு வியந்தான். ஆர்யவர்தா தீவு வீரர்கள் பின்னோக்கி நகர, சிறிது நேரம் போரும் நிறுத்தி வைக்கப்பட்டது.