முகநூல் முகமூடிகள்

செருப்பால அடிப்பேன்..

கோபத்தின் உச்சானி கொம்பில் நின்று பேயாட்டம் ஆடி,
அதன் தொடர்ச்சியாய் விரல் வழியே பாய்ந்த வார்த்தைகளிலும் அனல் கொட்டியது..
யாருடா நீ...
எனக்கு நீ என்ன வேணும்,பேஸ்புக்கில் ரெண்டு லைக் ஒரு கமெண்ட் போட்டால் உடனே பாஞ்சுக்கிட்டு இன்பாக்ஸ்ல வந்து என்னென்னமோ பேசுற,
உன்னை பத்தி எதும் கேட்டேனா,தேவை இல்லாம எதுக்கு உன்னோட பர்சனல் விசயத்தை வந்து என்னிடம் வந்து பேசுற..இனிமேல் வந்தினா ஸ்கிரீன் ஸாட் எடுத்து போட்டு கிழிச்சுருவேன் பார்த்துக்கோ ராஸ்கல் என அவனுக்கு இன்பாக்ஸில் பதிலெழுதி விட்டு அவன் படித்ததும் ப்ளாக் செய்து விட்டு லாக் அவுட் செய்து திரும்பினாள் ராஜி.

ஆனாலும் மனசு கொதி நிலையிலேயே இருக்க மீண்டும் லாக் இன் செய்து இன்று நடந்த விசயங்களை தன் பெண் தோழி அனிதாவிடம் சொல்லி விடிய விடிய சாட்டிங் செய்து சிரித்து கொண்டிருந்தான் ராஜி என்ற ஃபேக் ஐடியிலிருந்த ராஜா.

எழுதியவர் : சையது சேக் (28-Aug-17, 3:59 pm)
பார்வை : 334

மேலே