நண்பேனே எனது உயிர்
![](https://eluthu.com/images/loading.gif)
உனக்கென்று வானம் உறங்காமல்
விழித்துக்கொண்டு இருப்பதை
ஏன் மறந்தாய் நண்பா.
சிறு தூறல் நடுவே நாணலாய்
வளைந்துவிட்ட வானவில்லை ஏன்
ரசிக்க மறந்தாய் நண்பா.
உன் உடலோடு அனுதினமும் வருடி செல்லும் நல் பூங்காற்றை நீ உணர
ஏன் மறந்தாய் நண்பா.
கால் கடுக்க காத்திருக்கும் சுவற்றின்
குவியாடியை கவனிக்காமல் ஏன்
முகம் மறந்தாய் நண்பா.
வார்த்தைக்கு வார்த்தை உனையே
அழைக்கும் நன்றியுள்ள குரலை கடந்து
ஏன் மறந்து போனாய் நண்பா.
புள்ளிகள் வைத்த விழிகளாய் அவள்
காத்திருக்க கோலமாய் கவிமடல் நீ ஏன் வரைய மறந்தாய் நண்பா.
எல்லாவற்றையும் மறந்த நண்பா
நட்பை மட்டும் எனாட உன் கைவசம் வைத்திருந்தாய்,உன் அன்பில் ஏன்
இறையாக்கினாய் என்னை.
தோல்விகளும் துயரங்களும் சிகரம்
அல்ல அது யூரோ கிண்ண காற்பந்து எட்டி உதைத்து விட்டு வா.