அயல் தேசத்தில் என் நிலா

அயல் தேசம் சென்ற கணவன் நினைவில் வாழும் மனைவி பற்றிய கவிதை இது.


இருளில் இருள் கோர்த்து
இரவை வெறுமையாக்கி விட்டு
எங்கே சென்றாய் நிலா..

கும்மிருட்டில் நிழலும் துயில
தூரிகை கொண்டு கருமை பூச
கார்கூந்தல் நிறமும் ஒன்றாக
எங்கே சென்றாய் உலா..

மின்மினிப்பூச்சி பறந்து செல்ல,
மெழுகுதிரியும் கரைந்து செல்ல,
ஒளிக்கீற்றாய் ஏதோ ஒன்று தெறித்து செல்ல,
பார்வை அற்ற பாலகனாய் தடுமாறுகிறேன் நிலையில்லா.

உன்னையே ஞாபகமூட்டுவதெல்லாம்
உனக்கு பதிலீடாய் எதுவுமில்லையே இவ்வுலகில்,
நீயில்லாமல் நெஞ்சமெல்லாம் நினைவுகளில் தஞ்சமானதே என் நிலா..

நீ அயல் தேசம் சென்று நாளும் நகர்ந்து தேய்ந்து விட்டதே,
மீண்டு(ம்) விரைவாய் வருவாயா,
என் விழிதிரை தொடுவாயா,

உன் முழுமதி காண நாடுதே,
எந்தன் அம்மாவாசை இரவுகள்...

எழுதியவர் : சையது சேக் (28-Aug-17, 12:53 pm)
பார்வை : 100

மேலே