பயணங்கள் முடிவதில்லை
பயணங்கள்
வாழ்க்கையின் அங்கம்
முதல் பயணம் அன்னையின்
கருவறையிலிருந்து தொடங்குகிறது
பள்ளிப்பயணம் தினம் தினம்
போராட்டம் பிள்ளைக்கு
விளையாட்டு பயணம்
பொழுது போவதே
தெரிவதில்லை அதே பிள்ளைக்கு
சில பயணங்கள்
முட்கள் நிறைந்த
பாதையில்
சில பயணங்கள்
பூக்கள் நிறைந்த
பாதையில்
சில பயணம் கற்கள்
நிறைந்த பாதையில்
சில பயணம் நீர்
நிறைந்த பாதையில்...
சில பயணங்களுக்கு
பாதைகள்
தெரிவதில்லை
சில பயணங்களுக்கு
பாதையே கிடையாது
சில பயணங்கள்
ஒருவழி பாதையில்
சில பயணங்கள்
இருட்டு பாதையில்...
காதல் பயணம் ஒரு
கண்ணாமூச்சி
சில காதல் பயணங்கள் வெற்றியிலே சில
பயணங்கள் தோல்வியிலே
வெற்றி பெற்ற காதல்
மணவாழ்க்கை எனும்
பயணத்தை தொடங்குகிறது....
ஒரே பாதையில் வெவ்வேறு
பயணங்கள்
ஒரு இறுதி பயணத்தின் பூக்கள்
சிந்திய பாதையில்
புது மழலையின் வரவை
பார்க்க பிரசவ வலியில் தாய்
செல்லும் அவசர ஊர்தி...
பாதைகளும் பயணங்களும்
முடிவதில்லை
மனிதனின் வாழ்க்கைதான்
முடிந்துபோகிறது...