பெண்ணே காதல் பொழி
பெண்ணே.... காதல் பொழி...!
வாள்விழி வேல்விழி வஞ்சி விழி
வாலிபத்தை வீழ்த்தும் வஜ்ர விழி
கருவிழி கயல்விழி காந்தவிழி- பெண்ணே
காளையை கிரக்கிடும் காதல் பொழி
மருண்டவிழி பேசும் மையல் மொழி
ஊனுண்டு உயிர்கொல்லும் மோகச்சுழி
தேனுண்ட வண்டாகி என்தேகக் கழி-பெண்ணே
நீருண்ட எழிலியாய் காதல் பொழி
பாவை உழி திசைநோக்கி எந்தன் வழி
பனித்துக் காத்திருந்தேன் கூடல் கழி
பழியாய் வேண்டுகிறேன் இதழ்மொழி- பெண்ணே
மார்கழிப் பனியாகி காதல் பொழி
ஆழிசூழ் புயலாகி என்நேசக் கெழி
யாழிசையாய் வருடிடும் உன்நெஞ்சங்குழி
வாழி வாழியென வாழ்த்திட வாமன்விழி- பெண்ணே
உணர்மொழியாய் உயிர்மொழியாய் காதல் பொழி!
கவிதாயினி அமுதா பொற்கொடி