தமிழில் திட்டத் தெரியுமா வசைபாடுவது எப்படி
திருப்புகழில் இருந்து பத்து வசவுப் பாட்டுகளைத் தேர்ந்தெடுத்து அதிலுள்ள வசவுகளைத் தொகுத்து உள்ளேன். அருணகிரிநாதரின் இளமைக் காலம் முழுதும் தீய பழக்க வழக்கங்களில் கழிந்ததால் அவர் இந்த வசவுகளில் ஒரு நிபுணர். ஆனால் அவர் முருகனால் காப்பாற்றப்பட்ட பின்னரும் இப்படி தன்னையே தாழ்த்திப் பாடுவது இது போன்ற ஆட்களையும் முருகன் காப்பாற்றுவான் என்பதைக் காட்டவே. பொதுவாக அவர் வசைமாறி பொழியும் இடங்கள் உண்மையில் இன்றும் தீய நிலையில் இருப்பவர்களைக் குறிப்பதாகும்.
அசடன், கவடன், விகடன், ஆதாளிவாயன்
அவகுண விரகனை வேதாள ரூபனை
அசடனை மசடனை ஆசார ஈனனை
அகதியை மறவனை ஆதாளிவாயனை— அஞ்சுபூதம்
அடைசிய சவடனை மோடாதி மோடனை
அழிகருவழி வரு வீணாதி வீணனை
அழுகலை அவிசலை ஆறான வூணனை அன்பிலாத
கவடனை விகடனை நானா விகாரனை
வெகுளியை வெகுவித மூதேவி மூடிய
கலியனை அலியனை ஆதேச வாழ்வனை வெம்பி வீழுங்
களியனை அறிவுரை பேணாத மாநுட
கசனியை அசனியை மாபாதனாகிய
கதியிலி தனையடி நாயேனை ஆளுவது எந்நாளோ
I am a scoundrel, devil, wicked, stupid, refugee, loud mouth, hunter, stupid of all the stupid persons, idler of idlers, rotten stale foodstuff, glutton, cunning fellow devoid of love, sadist with a crooked mentality, man of foul temper, wretched harbinger of disasters, human scum, drinker, man of fickle life, sinner என்று அருணகிரி நாதர் தன்னையே நொந்துகொண்டு எனக்கு என்று அருளப் போகிறாய் என்கிறார்.
(திரு கோபாலசுந்தரம் அவர்களின் திருப்புகழ ஆங்கில மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி இருக்கிறேன்).
துட்டர்கள் பட்டியல்
ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள்
மாதா பிதாவைப் பழித்த துட்டர்கள்
ஆமாவினைச் செகுத்த துட்டர்கள் பரதாரம்
ஆகாத எமனாற் பொசித்த துட்டர்கள்
நானாவு பாயச் சரித்ர துட்டர்கள்
ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் தமியோர்சொங்
கூசாது சேரப் பறித்த துட்டர்கள்
ஊரார்க ஆசைப் பிதற்று துட்டர்கள்
கோலால வாவிற் செருக்கு துட்டர்கள் குரு சேவை
கூடாத பாவத் தவத்த துட்டர்கள்
ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள்
கோமாள நாயிற் கடைப் பிறப்பினில் உழல்வாரே
List of bad people: Those despicable people lacking in discipline, engaging in arguments, base people who abuse their parents, who kill the cows and eat beef, who cohabit with others wives, confident tricksters, immoral people who get intoxicated by drinking alcohol, thieves who usurp others wealth, blabbermouths, arrogant rogues, sinful people who don’t serve their masters, stingy people who amass wealth—those people will take birth baser than a boisterous mad dog.
ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் என்று குடிகாரகளைச் சாடும் அழகு தனி அழகு
கசுமாலம்
சென்னை வாசிகளுக்கு மிகவும் பிடித்த வசவு கசுமாலம். இதை பகவத் கீதையில் அர்ஜுனனை நோக்கி கண்ண பிரானும் பயன்படுத்துகிறார். இந்த சம்ஸ்கிருத சொல்லுக்கு அழுக்கு என்று பொருள்
ஊனேறெலும்பு சீசீமலங்க
ளோடே நரம்பு கசுமாலம்
Bones wrapped in flesh and skin along with disgusting faeces and discharged slags, nervous system, other dirts……
சங்காளர் சூது கொலைகாரர் குடிகேடர் சுழல்
சிங்கார தோளர் பண ஆசையுளர் சாதியிலர்
சண்டாளர் சீசீயவர் மாயவலை………..
Cut throats, gamblers, murderers, destroyer of families, women loitering around with sensuous shoulders covetous after money, indulging in carnal pleasures, coming from the basest lineage
தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை
வறியனை நிறை பொறை வேண்டிடாமத
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணனை மிகு கேள்வி
தவ நெறி தனைவிடு தாண்டு காலியை
அவமதி அதனில் பொலாங்கு தீமை செய் சமடனை வலிய அசாங்க மாகிய தமியேனை
I am an utter fool, crazy drunkard, arrogant scum, wastrel, roaming loafer, deliberately harmed others, an outcast, who went chasing after women என்று அருணகிரி நாதர் தன்னையே நொந்துகொண்டு எனக்கு என்று அருளப் போகிறாய் என்கிறார். காலி என்ற சொல் குறிப்பிடத்தக்கது.
பித்தர், அஞ்சர்,அவலர், பேய்க்கத்தர்
அறிவிலாப் பித்தர் உன்றன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்
அசடர் பேய்க் கத்தர் நன்றி அறியாத
அவலர், மேற் சொற்கள் கொண்டு கவிகளாகப் புகழ்ந்து
அவரை வாழ்த்தித் திரிந்து பொருள்தேடிச்
Stupid fools, evil people who never worship your feet, idiots, indulging in devilish deeds, thankless miserable ones—these are the people on whom I wasted words composing poems praising them, I went on heaping plaudits on them to make money.
சகல கருமிகள் சௌவிய சமயிகள்
சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர்
சவலை யறிவினர் நெறியினை விடைனி யடியேனுக்
Ritualists, religious fanatics, those who worship through offerings and meditation, confused and unwise ones— I wanted to give up all these things.
தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய பரபாதத்
தருமிகள் கருமிகள் வெகுவித சமயிகள் அவரொடு சருவாநின்
The blind people who departed from the righteous path, the proponents of other religions who boisterously thrust their tenets by plucking hairs (like the Jains), the evil doers and various religious zealots—I have been locking horns with all these people. ‘தவநெறி தவறிய குருடுகள்’ என்பது படித்து இன்புறத் தக்கது.
பாவி, கோபி, பேடி, மோடி, லோபி, கோழை, பேய்
மதிதனை யிலாத பாவி குரு நெறி இலாத கோபி
மனநிலை இலாத பேயன் அவ மாயை
வகையது விடாதபேடி தவநினைவிலாத மோடி
வரும் வகை யிதேது காயம் எனநாடும்
Sinner, coward, devil, hot tempered, ruffian, wicked miser, worthless fellow எனக்கும் அருள்புரி என்கிறார். பேடி, மோடி, கோபி, லோபி என்பன படிக்க சுவையாக இருக்கின்றன.
இன்னொரு இடத்தில் தேரா வ்ருதா, காமா விகாரன், ஆபாச ஈனன், அசாப சாசன், மோடாதி மோடன், கேடன், துரோகன், லோபன், வீணன் என்று அடுக்குகிறரர்.
குபேரன் யார்?
கொடாதவனை யேபு கழ்ந்து
குபேரனென வேமொ ழிந்து
குலாவியவ மேதி ரிந்து புவிமீதே
I used to praise a miser who had never given charity calling him the greatest giver like Kuberan and I kept on flattering him and wandering with him in vain!
பிறந்தார் கிடந்தார் இருந்தார் தவழ்ந்தார்
நடந்தார் தளர்ந்து பிணமானார்.
இந்தக் கருத்தை ஆதி சங்கரர், அப்பர் பெருமான் போன்றோர் அழகிய பாடல்களில் பாடியுள்ளனர் ( பாலனாய்க் கழிந்த நாளும்——-தேவாரம்; பாலஸ்தாவத் க்ரீடா சக்த:- ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம்)
தமிழ் வேதம்