பெண்மை துதி

பெண்ணியம் பேசயிங்கு எண்ணமுற்றேன்!
எந்த எண்களுமே எண்ணிக்கையில் போதவில்லை!
எண்ணுகையில் எண்ணமெலாம்
ஏற்றம் வரும்!
நல்ல மங்கையரால் மண்ணுலகம் மோட்சம் பெரும்!
ஆணென்ற சொல்லுக்கு அர்த்தமெல்லாம்!இங்கு
பெண்னென்ற பெயர் தந்த மீதிதானே!
மாதவம் செய்து வந்த மாதர்தானே!
இது கவிமணியார் கவியுரைக்கும்
சேதி தானே!
கரண்டியின் கைதொட்டு நின்ற பெண்டீர்! இன்று
கணினியின் கை தொட்டு நின்று விட்டார்!
அடுப்பங்கரை அடிமையாக வாழ்ந்திருந்தார்;
படிப்பின் கரை தொட்டு கரையேறி விட்டார்!
போர்வைக்குள் போதையல்ல நாங்கலெல்லாம்;.போர் தொழிலில் மேதையென்று காட்டிவிட்டார்!
பசியென்றேன் ருசியக உண்பதற்கு அவள் ஆதார் எண் கேளாமல் அன்னமிட்டால்!

எழுதியவர் : சுரேந்திரன் (28-Aug-17, 7:26 pm)
Tanglish : penmai thuthi
பார்வை : 58

மேலே