உயிரை பரிமாறிக்கொண்டோம்
தனிமை என்னை சூழும்போதெல்லாம்
உன்னைபற்றிய தவிப்புகளில்
தடுமாறி விடுகிறேன் !
உன்னை காண ஏக்கத்தில்
உயிர்வதை என்பதை
உள்ளுக்குள் உணரத்தொடங்குகிறேன் !
உன்னிடம் என் உயிரையும்
என்னிடம் உன் உயிரையும்
ஒப்பந்தம் ஏதும் இன்றி
பரிமாறிக்கொண்டது !
இந்த "காதல் "