தனிமையில் உன்னோடு
அன்றும் இன்றும் நீயாகி
ஆனால் அன்பு தீயாகி
நெஞ்சுக்குள்ளே பஞ்சு வைச்சு
நினைவு கொளுத்தும்போதேல்லாம்
நீ முள்ளாய் குத்தும் ரோஜாசெடி
கண்ணில் பட்ட காயத்திற்கு
கண்ணீர்விடும் கண்ணுக்கு
மனதில் வருகிற அழுகைக்கு
மற்றம் ஒன்று தருவாயோ
பிள்ளை பெரும் தாயுக்கு
பேறு ஒன்று சுமையே இல்லை
வலிகள் தாங்கும் இதயத்திற்கு
வருத்தம் ஒன்றும் பெரிதேயில்லை
தாயை போல நீயுந்தான்
தாங்கி நடந்தால் தீரும்தான்
என்னை நீயும் மாற்றலாம்
ஏங்கி நிற்கும் வாழ்க்கைக்கு
பாதை ஒன்று காட்டலாம்
பரிவும் அதிலே கூட்டலாம்
முற்று புள்ளி வைக்காமல்
முடிந்தால் கோலம் போட்டு நீ
கூடி இன்பம் காட்டினால்
கோலம் கூட மணமாகும்