கல்லூரி காதல்
சாலையெங்கும் கண்கள் சடுகுடு ஆடும்
காலைகளின் கூட்டம் பெட்டிக்கடை தேடும்
மறந்து மறந்து கண் வளை வீசும்
மாட்டி கொண்ட மீனை பற்றி பேசும்
தேடி தேடி துரத்தும் கண்ணில் காதலோ
திரும்பி திரும்பி பார்க்கும் நெஞ்சில் காமமோ
ஊடலோ சாடலோ நேரிலே போகுதோ
உண்மையில் சற்றேனே இளமையும் பூக்குதோ
பார்த்து பார்த்து கண்கள் திகைக்கும்
படிக்கும் போதும் கனவினில் பார்க்கும்
கடிதம் போட்டும் கணக்குகள் போடும்
மேலும் கீழும் அழகென பார்க்கும்
விண்மீன் வெளிச்சம் பிடிக்கும்
வெள்ளை நிலவும் பிடிக்கும்
பூக்கள் பார்த்து சிரித்து
பாடல் கேக்க பிடிக்கும்
மலையின் மீதுதான் ஏறி நின்று தான்
அவள் பெயரை சொன்னால் பிடிக்கும்
வயதின் ஆசை மீசை முறுக்கும்
பெண்கள் மனதை பறிக்க துடிக்கும்