கிறுக்கல்

மனதில் இடம் ஒதுக்கி இரண்டு வரிகள் படிக்க நேரம் இல்லாதவளே !
உன்னாலே தானடி என் ஏராள கவிதைகள் உயிர் பெறாமலே மரணித்துப் போகிறது ..

போராடினேன் உன்னுடன்
அன்புத் தொல்லையாய், அகிம்சாவாதியாய் ....

உன் கண்களில் தானடி விழுந்து விட்டேன்,
பெண்களின் கண்களுக்கு மட்டும்
ஏன் இவ்வளவு கவர்ச்சி கொடுத்தானோ பிரம்மன்..

உன் கண்களை பார்க்கும் பொழுது எல்லாம்,
இமைக்க மறுக்கிறது இமைகள் ...

உச்சம் தலை முதல் உள்ளங் கால் வரை ,
உன்னை ஏந்த ஆசை தான் என்னுள்ளும்,

ஆனால் என்ன செய்ய உன் மனதில் தான் இன்னொருவன்
இடம் பிடித்து விட்டானே ....
கனவுகள் வெறும் கனவாய் கலைந்தது ...

ஆதலாலோ என்னவோ கண்மணி
கிறுக்கு பிடித்து கிறுக்கி கொண்டு இருக்கிறேன் ,,

மது வாசனைய விட எழுத்து வாசனை இன்பம் தருவதால் ..

எழுதியவர் : தமிழரசன் (31-Aug-17, 9:09 am)
Tanglish : kirukal
பார்வை : 114

மேலே