அதே கடல்

உன்னைப்பற்றிய நினைவுக்கடலின் அலைகள்
என் கால்களை நனைக்கும்போதெல்லாம் .....
என் விழிகளும் தாமாக நனைந்துகொள்கின்றன.....

"ஆறுதலடைவாய்"....என்று நண்பர்கள் கூறியதால் ......
வராது அடம்பிடித்த தேற்றுதலை
வரவழைத்துக் கொண்டு.....

இம்முறை....
உன்னைப்பற்றி நினைக்கக்கூடாது கூடாது என்றே எண்ணம் சித்தம் கொள்வதால்....
எப்படிப்பார்த்தாலும் மீண்டும் .....
உன் நினைவுகளே மனதில் நிறைந்துக்கொள்கின்றன....

இப்படியான...
என் வேடிக்கை வாடிக்கையின்
ஒரு சுழற்சி முடிந்தான நிலையில்.....
மீண்டும் ஆயத்தமாகிறேன்....
அதே கடலில் கால்நனைக்க....

எழுதியவர் : மகேஷ் லக்கிரு (31-Aug-17, 10:56 am)
சேர்த்தது : மகேஷ் முருகையன்
Tanglish : athey kadal
பார்வை : 498

மேலே