இதுவும் ஒரு கவிதை
இதுவும் ஒரு கவிதை
விண்மீனகள் கண்ணை சிமிட்டி
அழைக்கிறது
தொலைவில் இருப்பதால்
காதல் கணை தொடுக்க முடியாது
என்கிற தைரியமா?
சூரியன் மேல் நான்
கோபம் கொள்ள மாட்டேன்
என் கோபம் அதை பொசுக்கி
விடும் என்ற பயம்
செடிகளே !
உன்னுள் பிறக்கும்
மலர்களுக்கு பல பல
நிறங்கள் கொடுத்து விட்டு
பச்சையை மட்டும்
உடுத்தி கொள்கிறாய்
வஞ்சனையா? தியாகமா?

