எங்கே மனிதநேயம்

இலையுதிர் காலத்தில்
மரங்களில் இருந்து
இலைகள் உதிரும்,
இப்படித்தான் உதிர்ந்து
கொண்டிருக்கின்றது
இன்றைய மனிதநேயமும்..

வானம் பார்த்த பூமியாய்
வறண்டு கொண்டிருக்கின்றது
மனிதநேயம்..

பாலைவனத்தில் நீரை
தேடி கொண்டிருப்பதாய்
இருக்கின்றதுஇன்றைய
மனிதநேயம்..

போதையால்
புத்தியை இழக்கிறான்,
காம இச்சையால்
கண்ணியத்தை
இழக்கிறான்,
பகட்டிற்காக
பண்பாட்டை இழக்கிறான்,
பணத்தாசையால்
நல் உறவுகளை
இழக்கிறான்....
ஜாதி வெறியில்
கொலை செய்யவும்
துணிந்துவிட்டான்..

ஜனனத்திற்கும் மரணத்திற்கும்
இடையில்
இயந்திரமாய்
சுழன்று கொண்டிருக்கின்றது
மனிதனின் வாழ்க்கை..

யாருக்காக இந்த ஓட்டம்,
எதற்காக இந்த தேடல்?
புன்னகை என்பது
புதைந்து போனது,
பாதுகாப்பு என்பது
பயிரை மேயும்
வேளியென ஆனது..

நவீனமயமாக்கல்
என்கின்ற பெயரில்
இயற்கையையும் சீண்ட
ஆரம்பித்துவிட்டான்..

இனி என்ன இருக்கின்றது
அழிக்கவும் சிதைக்கவும்..
இதில் எங்கே இருக்கின்றது
மனிதநேயம்?

நாளைய தலைமுறையினர்களுக்கு
நாம் எதை கொடுக்க போகிறோம்?

எழுதியவர் : மதிமகள் சண்முகபிரியா (31-Aug-17, 3:38 pm)
Tanglish : engae manithaneyam
பார்வை : 3915

மேலே