ஆகச்சிறந்த ஆடை எது

[] ஆகச்சிறந்த ஆடை எது ...
---------------------------------------------------------------------

தேவதைகளுக்கு -
ஆகச்சிறந்த ஆடை எது ..?

புடவையா ..
தாவனியா ..
சுடியா .. மிடியா ..

நீ முதலில்
இதில் ஒன்றை
தினம் உடுத்தி
பழக்கப்படுத்து !

நீ பாட்டுக்கு -
ஒரு நாள் சேலையில் வருகிறாய்
மறு நாள் தாவனியில் வருகிறாய்
மற்றொரு நாள்
சுடியிலோ மிடியிலோ திரிகிறாய் !

எல்லாமே உனக்கு
சிறப்பாய் இருக்கையில்
எதையாவது ஒன்றை
சொல்ல சொன்னால்
நான் எதை சொல்வேன்
தேவதைகளுக்கு சிறந்த உடை
எது என்ற கேள்விக்கு பதிலாய் ..!


-யாழ் ..

.

எழுதியவர் : யாழ் கண்ணன் (31-Aug-17, 5:38 pm)
பார்வை : 149

மேலே