காற்றோடும் காதலோடும்
சில தருணங்களில்
காற்றில்...
காய்ந்த இலைகளுக்கும்
சிறகுகள் முளைக்கும்
பிழையோ?
உன் பார்வையின்
கனைகள்..
வீசிடும் வில்லில்லை அன்(ம்)புகள்
பொய்யோ?
நின் பின்னழகில்
கொழுசின் ஒலியில்
என் நிழலிழப்பது
தவறோ?
வீரமான கோழையாய்
மனிதனின் கோடுகளை
அழிக்கமுடியவில்லை..
ஏந்திழை!
நமக்கு பூமி போதவில்லை..
கணங்களறியா ?
பொய்களறியா?
பணமில்லா?
நினைவறியா?
இனமறியா?
மனிதமில்லா?
ஓர் வான்வெளியில்
மலர்களுடன்
சிறிது புணர்வுடன்
நீயும் நானும்
காற்றோடும் !காதலோடும்!