சும்மா ஒரு காதல் சண்டை

காதலன்:-
என் கனவுகளில் நீ எப்போதும் கொடுக்கிற தொல்லை...
நித்தமும் பொறுக்க முடியவில்லை...
அடியே!
இதற்கெல்லாம் இல்லையோ ஒரு எல்லை?...
நான் கோபப்பட்டால் உடைத்துவிடுவேன் உன் பல்லை...
மறந்து விடாதடி நான் சொன்ன சொல்லை...

காதலி:-
அடேய்!
மறக்கவில்லைடா நீ சொன்ன சொல்லை...
இப்போ உடைத்துக் காட்டுடா என் பல்லை...
ஈஈஈஈஈ...

காதலன்:-
அடேய்!
கணை தொடுத்தாயோ உன் கண்களென்றால் வில்லால்...
ஓங்கிய கை ஒடுங்குதடி உன் கண்கள் சொன்ன சொல்லால்...

காதலி:-
பனிமலையாய் பேசி நெருப்பை அணைக்கப் பார்த்தாயோ?
அடிப்பேன் டா செருப்பாலே...
ஒழுங்கா ஓடிரு...

காதலன்:-
உனக்கு பயந்து ஒடுவதா நான்?
எங்க அடி பார்க்கலாம் உன் செருப்பின் பலம்!...

காதலி:-
அடிக்கத் தான் நினைக்கிறேன்...
ஆனால் மனசு வரலடா...

பொறுமை இழந்த நான்:-
ஹாஹாஹா!
உன்னால அவளையோ,
அவளால உன்னையோ அடிக்கவே முடியாதுடா...

காதலனும், காதலியும்:-
அது எப்படிடா உனக்குத் தெரியும்?

நான்:-
அடேய்!
காதலர்களாய் உங்களைக் கற்பனையில் படைத்த பிரம்மன் நான்...
அடிக்கடி சண்டை போடுவீங்க...
ஆனால், பிரிவோ அடிதடியோ நடக்காது...

காதலி:-
மிஸ்டர் பிரம்மா!
அடிதடி இப்போ நடக்கப்போகுது பாரு...
டேய்!
அடிடா இவனை...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (31-Aug-17, 8:21 pm)
பார்வை : 2086

மேலே