நாடகங்கள் நிலையாக உன்னைக் காணாமல் இருந்திருக்கலாம்-6
எழுதுவதென்றால் எழுதிவிடலாம் காதல் மடலை
நீ ஏற்பதாயிருந்தால் ஆனால் ஏற்காவிட்டால் என்ன செய்வேன்
தருவதென்றால் தந்துவிடலாம் என் மனதை
நீ பெறுவதாயிருந்தால் ஆனால் பெறாவிட்டால் என்ன செய்வேன்
சொல்வதென்றால் சொல்லிவிடலாம் என் கதையை
நீ கேட்பதாயிருந்தால் ஆனால் கேட்காவிட்டால் என்ன செய்வேன்
காட்டுவதென்றால் காட்டிவிடலாம் என் கவிதையை
நீ படிப்பதாயிருந்தால் ஆனால் நீ படிக்காவிட்டால் என்ன செய்வேன்
திறப்பதென்றால் திறந்துவிடலாம் என் இதயத்தை
நீ வருவதென்றால் ஆனால் நீ வராவிட்டால் என்ன செய்வேன்
வெளிப்படுத்துவதென்றால் வெளிப்படுத்திவிடலாம் என் நேசத்தை
நீ வழிமொழிவதாயிருந்தால் ஆனால் நீ ஒளிவதாயிருந்தால் என்ன செய்வேன்
சொல்லிவிட எனக்கும் ஆசை ஏனோ
மென்றுவிட நினைக்கும் மனசு தானோ
சொல்லி பார்க்கவா என்னைக் கேட்கிறேன்
என்னைக் கேட்டப்பின் எண்ணிப் பார்க்கிறேன்
எண்ணிப் பார்த்தபின் திண்ணம் கொள்கிறேன்
திண்ணம் கொண்டபின் சொல்லித் தீர்க்கிறேன்
சொல்லி தீர்த்தப்பின் துள்ளிக் குதிக்கிறேன்
துள்ளிக் குதித்ததும் கிள்ளிப் பார்க்கிறேன்
கிள்ளிவிட கனவும் கலைந்து போகிறதே
கிள்ளிவிட நிஜத்தில் பொய்ஓன்று வீழ்கிறதே
கிள்ளிவிட நினைவுகளில் போய்அது வாழ்கிறதே
அள்ளிவிட கைகளும் நெருங்கிப் போகுதே
அள்ளிவிட ஆவலும் ஆசையும் கூடுதே
அள்ளிவிட காதலும் நேசமும் கேட்குதே
தள்ளிவிட அது எதுவோ என்னை
தள்ளிவிட கால்கள் நகர்ந்து போகுதே
தள்ளிவிட காலம் கரைந்து போகுதே
நம்ம்மிருவர் இடை நிற்கும்
நட்பைநாம் என்ன செய்யவோ
நம்காலம் கடை வரை
நம்நாட்கள் நகருமா இப்படியே
முடிவில்லா கன்னித்தீவு
நட்பிலொரு கண்ணாமுச்சியோ
இரு பட்டாம்பூச்சிகள்
இறக்கை இருந்தும்
பறக்க யோசித்தபடியே....
இரு குருவிக்குஞ்சுகள்
பறக்கத் தெரிந்தும்
சிறகுகள் தேடியபடியே ...
இரு மீன்கள்
நீந்தத் தெரிந்தும்
கண்ணீரில் சிலையானதே ...
இரு மான்கள்
தாவத் தெரிந்தும்
அசையா மலையானதே ..
இரு உயிர்கள்
தனை தொலைத்தும்
நாடகங்கள் நிலையானதே ...
இரு இதயங்கள்
தம்மை இழந்தும்
நட்பில் வலையானதே ...