வெட்க்கம்
எங்கே முகத்தில்
உமிழ்ந்து விடுவார்களோ என்றே ,
கவிழ்ந்து கொள்கிறது
மனது,
அந்த கொடூரத்தின் கோரம்
இரவை இமை மூடாதிருக்க செய்தது
அறுபட்ட கழுத்தில்
குழந்தைகளின் தளிர் கழுத்தே
அதிகமதிகம்,
வெட்டிய வாள்கள் கூட
வெட்கியிருக்கும்
வெட்டியவனறியமாட்டான்
வேதனை,
குவிந்துக்கிடந்த பிணங்கள்
மதங்களை கடந்து
பரந்து விரிந்து கிடந்தது,
ச்:கொட்டி கடந்து
போனதெத்தனையோ
மனங்களில் ஐயகோ
இதெற்க்கென்ன செய்வது
செய்வது பரிகாரமென
மறந்து போகுது,
தொலைக்காட்சியின்
அடுத்த சேனல மாற்றும்வரையில்,