கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்-காதல் துளிகள்-09

....கொஞ்சம் காதல்
கொஞ்சம் மோதல்....

காதல் துளிகள் : 09

41.கவிதை எழுதிட நான்
கவிஞன் இல்லையென்றாய்
ஆனால் என் உதடுகளில்
தினம் தினம் புதுக்கவிகள்
வரைந்து எனை ரசிக்கும்
கலைஞனாகின்றாய்...

42.இடைவெளிகள் நமக்குள்
அதிகமென்றாலும்
என் இருதயத்தில் நீ
குடியிருப்பதால்
நம் காதல் நிரப்பிக்
கொள்கிறது இருவருக்கும்
இடைப்பட்ட விலகலின்
வெற்றிடங்களை...

43.நம் அகவரிகள்
இரகசியமாய் இணைந்து
கொண்டதில்
என் முகவரியில் நீயும்
வானிலை மாற்றங்களை
அறிமுகம் செய்து
கொள்(ல்)கிறாயடா...

44.என் வீட்டுச் சுவரெங்கும்
நான் வரைந்த உந்தன்
ஓவியங்களால்
எந்தன் இரவுகள் அனைத்தும்
உன் வாசத்தை
சுவாசிப்பதிலேயே
கழிந்து போகின்றன...

45.உன் விரல்கள் என்னை
தீண்டிய போதுதான்
உணர்ந்து கொண்டேன் நானும்
என் கன்னங்களும் செவ்வானமாய்
சிவக்குமென்று...

எழுதியவர் : அன்புடன் சகி (1-Sep-17, 11:16 am)
பார்வை : 482

மேலே