ஐக்கூ முயற்சி

ஐக்கூ முயற்சி...

இரத்தக் களரியில்
துடி துடித்தும் வாழ்கிறது
இதயம்...!

தன் வீட்டு கதவை
திறக்க உரிமையில்லை
கண்களுக்கு...!

நல்லவனாய் கைதாகி
கெட்டவனாய் தப்பிக்கிறது
உடலிலிருந்து காற்று...!

எல்லோரின் பிழைப்பிற்கும்
தேவைப்படுகிறது
சூரியன்...!

குளிரூட்டியுடன் அறையில் நான்
சாளரத்தில் தெரிகிறது
வெயிலில் பறக்கும் பறவைகள்...!

மகிழுந்திற்குள்ளேயே
ஒரு வேகத்தடை
மகளின் சிரிப்பு...!

கண் திருஷ்டி பட்டுவிடுமோ..?
போர்த்திக்கொள்கிறது மலைக்காடு
பனிமூட்டம் கொண்டு...!

தீர்ந்தது சாராயம்
கோஷமிட்டனர் குடிமகன்கள்
மறுதேர்தல் வேண்டி...!

மரக் கரிக்கோல் கொண்டு
தாளில் எழுதினான்
மரம் வெட்டாதீரென்று...!

கோலமிடுவதில் மும்முரம்
வண்ணமிட்டாள் கோலத்தில்
அவள் முகத்தில் வண்ணம்...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (1-Sep-17, 1:49 pm)
பார்வை : 289

மேலே