தேனினும் இனிய மொழியே

ஊனிலும் உயிரிலும் கலந்த மொழியே !
தேனினும் சுவை மிகுந்த அமுத மொழியே !
திகட்டா தித்திக்கும் இலக்கியம் தந்த
இனிய மொழியே !
வானினும் உயர் பெருமை கொண்ட
பழம் பெரும் மூத்த மொழியே !
எங்கும் காணாத தெய்வப் புலமை கொண்ட செந்தமிழே !
எங்கும் கண்டிறாத கற்பனை களஞ்சியம் கொண்ட பைந்தமிழே !
தன்னகரில்லா தனித்துவம் வாய்ந்த
கன்னித் தமிழே !
கல்வியும் வீரமும் விதைத்த வீரத் தமிழே !
இணையத்திலும் வென்ற இணையத்தமிழே !
முத்தமிழ் தந்த முதுமொழியே !
பண்டைய பண்பாட்டை காத்த திரைக்
கடலே !
அதிசியக்கும் அறிவியலை அன்றே கொடுத்த அறிவுக் களஞ்சியமே !
இயற்கையுடன் இணைந்த இயற்கைத் தமிழே !
முச்சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்து
முத்தாய் எங்கள் நாவில் விளையாடும் முத்தமிழே
நன்நெறியை உலகிற்கு எடுத்தூட்டிய நற்றமிழே
வாழ்க்கையை எடுத்து காட்டிய எங்கள் தாய்மொழியே
பல எழுது கோல்களும் கவி பாட இலக்கணம் வகுத்த மொழியே
உலகில் மூத்த மொழியாய் விளங்கி
எங்கள் உதிரத்தில் கலந்து
அனுவில் உறைந்து
நாவில் புலரும் தீந் தமிழே
எங்களை உலகிற்கு அடையாளம் காட்டினாய்
இன்று உமது அடையாளத்தை தேடுகிறோம்
என்றும் உம்முடன் பயணிப்போம்
எங்கள் தாய்மொழி தமிழென்று உறக்கச் சொல்வோம்
மனிதனாய் தமிழனாய்
வாழ்க தமிழ் !வளர்க தமிழ் !

எழுதியவர் : பிரகதி (1-Sep-17, 11:42 pm)
பார்வை : 826

மேலே