கவிதையாக

கவிதையாக ....
கவிதை by : பூ.சுப்ரமணியன்

தென்றல் காற்றிலே
மொட்ட மாடியில்
தலையணையை
அரியணையாக்கி
விண்மீன் கூட்டம்
ரசிக்கும்போது
கவிதை ஒளியாக
என்னிடம் சிரித்தது !

மலையில் நின்றுகொண்டே
கலை நோக்கோடு
நீர் வீழ்ச்சி ரசிக்கும்போது
கவிதை அருவியாக
என்னிடம் கொட்டியது !

மண்ணில் அமர்ந்துகொண்டே
மலர்க் கூட்டத்தின் நடுவே
மயங்கி நிற்கும்போது
கவிதை மலராக
என்னிடம் மலர்ந்தது !

வாசலில் நின்றுகொண்டே
வானவில்லை நோக்கியபோது
எண்ணங்கள் கவிதையாக
என்னிடம்
வண்ணங்களாக் பூத்தது !

பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (2-Sep-17, 1:10 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : kavithaiyaga
பார்வை : 144

மேலே