புனிதமான அனிதா

பிறர் வாழ்க்கை முன்னேற தன் வாழ்க்கையை தியாகம் செய்த சகோதரி அனிதாவிற்கு தலை வணங்குகிறேன்..

கைகட்டி வேலை பார்த்த
என் தந்தையின் வாழ்க்கைமுறை
உயர்த்த நினைத்தேன்,
கனவாக சென்றது என் எண்ணம்.

வெளிச்சமின்றி படித்தேன்
வெளிச்சத்திற்கு வந்து விடலாம் என்று
வெளிச்சத்திற்கு வந்து விட்டேன்
இ(ருப்பினும்
நிரந்தரமான நிலவொளியில்
நான்

கனவு காணுங்கள்
என்றுரைத்தீர்களே ஐயா
கடைசி வரை எங்களால்
கனவு மட்டுமே காண முடிகிறது.....

ஒரு மருத்துவரின்
உயிரை மட்டுமா பறித்தது
இந்த மத்திய அரசு
இனி குணமாக இருந்த
பல உயிர்களையும் பறித்து விட்டதே...

எழுதியவர் : அருண்குமார்.செ (2-Sep-17, 1:17 pm)
பார்வை : 139

மேலே