அவுங்க ஆர்எஸ்எஸ் RSSகாரங்க

என்னடா பல வருசம் கழிச்சு மதுரைக்கு உங்க மாமா வீட்டுக்குப் போனியே நல்லா கவனிச்சாங்களா?
😊😊😊😊😊
அடப்போடா முத்து. அவுங்க ஆர்எஸ்எஸ்-காரங்க ஆகிட்டாங்கடா.
ஒரு நாள்தான் தங்கினேன். மூணு வேளையும் ரசம் சாதம்தான் தந்தாங்க. ஆர்எஸ்எஸ் ஆகிட்டாங்களாம்.
😊😊😊😊😊😊
அதென்னடா ஆர்எஸ்எஸ்? அதுக்கும் ரசம் சாதத்துக்கும் என்னடா சம்பந்தம்?
😊😊😊😊😊😊
மாமாவுக்கு மூணு பொண்ணுங்க. ரண்டு பேருக்கு திருமணம் செஞ்சு வச்சிட்டாரு. மூணாவது பொண்ணு கல்லூரி கடைசி வருசம் முதுகலை வகுப்பில படிக்குது. அது கல்யாணத்துக்கும் பணம் சேத்துணுமில்ல. அதனால சாப்பாட்டில சிக்கன நடவடிக்கை. செவ்வாய், வியாழன், சனி. இந்த மூணு நாளைக்கும் ஆர்எஸ்எஸ் அவுங்க.
😊😊😊😊😊
என்னடா கொழப்பற?
😊😊😊😊😊
மாமாவிட்டாரே சொன்னதுதாண்டா அந்த ஆர்எஸ்எஸ். ரசம் (Rasam) சாதம் (Saatham) சாப்பிடறது(SappidaRathu).
😊😊😊😊😊
ஓ... அப்ப வாரத்தில மூணு நாளைக்கு அவுங்க ஆர்எஸ்எஸ்சா?
அப்பிடி போடு அருவாளை.


Close (X)

10 (5)
  

சிறந்த நகைச்சுவைகள்

மேலே