மகன் மகள்

என்னோட ரட்டைக் குழந்தைங்களுக்கு பேரு வையுங்க சாமி.
@@@@@@@@@@@
பையன் பேரு மகன். பொண்ணுப் பேரு மகள்.
@@@@@@@@@@@
என்ன சாமி உறவுமுறைச் சொற்களை பிள்ளைங்களுகு வைக்கச் சொல்லிட்டீங்க. இந்தப் பேருங்களக் கேள்விப்பட்டா சனங்க எங்களயும் எங்க பிள்ளைங்களையும் கிண்டல் பண்ணுவாங்களே சாமி. பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்களா வையுங்க சாமி.
@@@@@
அந்த இந்திப் பேருங்களும் இதே அர்த்தம் தான் வரும். பராவில்லையா?
@@@@
அர்த்தம் எதுவோ இருக்கட்டும் சாமி. பேருங்க கண்டிப்பா இந்திலதான் இருக்கணும், அப்பத்தான் சனங்க எங்கள் மதிப்பாங்க.
@@@@
சரி. பையன் பேரு தனுஜ். தனுஜ் -ன்னா மகன். பொண்ணு பேரு தனுஜா. தனுஜா -ன்னா மகள். போதுமா?
@@@@@@
ரொம்ப நன்றீங்க சாமி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல; சிந்திக்க. தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம். திரைத் தமிழைத் தவிர்ப்போம். கற்றோர்க்குரிய நற்றமிழை எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்துவோம். ஊடகத்தாக்கத்திலிருந்து தமிழைக் காப்போம்.

எழுதியவர் : மலர் (1-Sep-17, 3:44 pm)
Tanglish : magan magal
பார்வை : 306

மேலே