தமிழ் வாழ்க ---படித்த கவிதை

முதன் முதலாக எ னக்கு தெரிந்த தமிழை இந்த வலை பூவில் பகிர்ந்து
கொள்கிறேன்


காதலால்தான் உலகில் எல்லாம் நடக்கிறது .அப்படி பட்ட ஒரு காதல் வயப்பட்ட ஆண் தன் காதலை எப்படி கூறுகிறான் என்பதை சங்க கால பாடல் ஒன்றை பாருங்கள் .



சுனைப்பூ குற்று தொடலை தை இப்
புனக்கிளி கடியும் பூங்கண் பேதை
தான் அறிந்த்ளனோ? இலளோ?பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து என்
உள்ளம் பி ன்னும் த ன்னுழை யதுவே
-
குற்று-பறித்து ,தொடலை -மாலை தைஇ- செய்து,பா னாள்-நள்ளிரவு ,பள்ளி - ப டு க்கை ,உழை -இடம்



சுனையில் பூத்த பூக்களை பறித்து மாலையாக கழுத்தில் சூடி கொண்டு திணை புனத்தில் கிளி விரட்டும் பூ போன்ற கண்களை உடைய பேதை பெண் அவள் அறிந்தா ளோ?இல்லையோ? அவள் மீது நான் கொண்ட காதலால் நள்ளிரவில் கூட நான் தூங்குவதில்லை .தூங்கும் யானையின் பெரு மூச்சுபோல் மூச்சு விடுகிறேன்,என் உள்ளம அவளிடமே உள்ளது


இடுகையிட்டது தமிழ் விரும்பி புஷ்பநாதன்

எழுதியவர் : (2-Sep-17, 6:38 pm)
பார்வை : 62

மேலே