பிரிவு

எப்பொழுது என்னில்
நீ பிரவேசித்தாய்...
வரும்போது மௌனமாய்
யாரும் அறியாமல்
என்னுள் , என்
உயிரில் ஊடுருவிட்டாய்..
ஆனால் ...........
இன்று
நீ என்னை விட்டு
நிரந்தரமாய் பிரிந்து செல்கையில்
கடலின் சீற்றம் , இரைச்சல்....
தீயின் நெருப்பு கனல் என்னில் ...
இருளின் பள்ளத்தாக்கில்
என்னை தனியே
தவிக்க விட்டு செல்கிறாய் ...
தயவு செய்து ,
ஒரு உதவிசெய்...
நீ வந்த சுவடு
நான் அறியாதது போல ...
நீ என்னை விட்டு
செல்லும்போது செல்....
போதும் ......
உன் பிரிவின் வலி ....

எழுதியவர் : (4-Sep-17, 2:44 pm)
சேர்த்தது : சுபா பிரபு
Tanglish : pirivu
பார்வை : 92

மேலே