சீக்கிரமா வந்துருவேன், எனக்காக காத்திரும்மா

ஆயிரந்தான் கவிதை எழுதினேன்,
அழகா பொய் சொன்னேன்
பெற்ற தாய் உன் பெருமை
ஒரு வரிகூட சொல்லவில்லை,
இமயம் போல புகழ் வரும் என் பிள்ளைக்கென
இமைக்காமல் வளர்த்தவளே,
உன்னை பிரிந்து நான் வேறு ஊரு
வந்து பிழைப்பதென்னவோ?
எங்கே இருந்தாலும் , எல்லாமும் இருந்தாலும்
எதிலும் தெரியவில்லை தாயே உன் அன்பு முகம்,
கோடி வார்த்தை சேர்த்து கவிதை எழுதினாலும்
உண்மையான உன் பெருமை எழுத முடியவில்லை எனக்கு,
இப்போதான் தெரியுதும்மா நீ வைக்கும் ரசசாதம்,
இப்போதான் புரியுதும்மா நீ இல்லா தனிமைகள்
வந்துருவேன் சீக்கிரமா, எனக்காக காத்திரும்மா.................

எழுதியவர் : ஸ்ரீஜே (5-Sep-17, 4:30 pm)
சேர்த்தது : ஸ்ரீஜே
பார்வை : 268

மேலே