நீதான் ஆரம்பம்
வரையாத ஓவியமாய்
வந்து நிற்கிறாய்
எங்கெங்கும் எதிரில்,
அறைமுழுக்க
ஆசை ஆசையாய்
அலைபாயும் உந்தன் சுகந்தம்,
உள்ளிழுக்கும்
மூச்செல்லாம்
நீ!
உயிர்ப்புள்ள
எல்லாமும்
உன்னிலிருந்தே
ஏனெனில்
நீதான்
ஆரம்பம்,,,,,,!!!!