முதிர் கன்னி

முகவரிகள் தொலைத்த போது
முதல் வரியாய் நீ வந்தாய்
முகில் கொஞ்சம் விலக்கிடும் போது
முழுமதியாய் நீ ஒளிர்ந்தாய்
முகம் தன்னை நோக்கிடும் போது
முத்து சிரிப்பாள் நீ மிளிர்ந்தாய்
முதலுடன் நான் உன் கரம் பிடிக்க வருகையில்
முதிர் கன்னியாய் நீ மடிந்துவிட்டாய்

எழுதியவர் : மாஹிரா (6-Sep-17, 12:43 pm)
Tanglish : mudhir kanni
பார்வை : 183

சிறந்த கவிதைகள்

மேலே