பட்டாசு பூக்கள்

கந்தக சேற்றில்
வெந்த விரலில்
ரத்தம் கசியும்,....
ராத்திரி குடிச்ச
பழைய கஞ்சி
நெஞ்சு கரிக்கும்........
முன்னிரவில்
தொலைத்த தூக்கம்
கண்ணயர்த்தும் ............
அயர்ந்த வேளை
மேஸ்திரியின் மிருகவிரல்
பிடரியில் கொட்டும்................
எப்போது வரும்
இந்த தீபாவளி
சத்தமா குறட்டை விட்டு
சந்தோசமா நான் தூங்க..................
-குழந்தை தொழிலாளி