நண்பரே

கலிவிருத்தம்

நாமெ னச்சொலும் நன்மையைக் காட்டிடும்,
பூம ணம்புரை புன்னகை தூவிடும்,
ஏமம் நல்கவே ஏற்றவன் தந்ததாம்
காமம் கண்டிடாக் கண்ணிய நட்பதே !

வாழ்வில் செம்மையும், வன்மையும், நேசமும்,
தாழ்வில் தோள்களும், தாண்டிடப் பாதையும்,
ஆழ்ந்து தந்திடும் அன்புடை நண்பரைச்
சூழ்ந்து வாழ்பவன் சொர்க்கமும் காண்பனே !

*
ஏற்றமே சொல்லுவார் என்றும் வாழ்விலே !
தோற்றிடும் போழ்திலும் தோளில் தாங்குவார் !
ஊற்றென யின்புறு முண்மை வேளையும்,
சீற்றமா யின்பமே சிந்துவர் நண்பரே !

எழுதியவர் : விவேக்பாரதி (6-Sep-17, 8:43 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 55

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே