பாரதீ
கருப்பு நீக்கவந்த வெளிச்சம் - இவன்
. கடவுள் அனுப்பிவைத்த வெளிச்சம்
விரும்பிப் பாடிவந்த வெளிச்சம் - மிக
. விந்தை யானதிந்த வெளிச்சம் !
அருமை கூட்டவந்த வெளிச்சம் - நம்
. அடிமை தீர்க்கவந்த வெளிச்சம்
பெருமை வாய்ந்தபெரு வெளிச்சம் - சொலும்
. பேரே கோடியொளி மினுக்கும் !
-விவேக்பாரதி