கர்ணன்

பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்

சூரியப் புத்திரன் துரியனின் மித்திரன்
. சூதுவா தறியாதவன்
சூழ்ச்சியில் வென்றிடத் தெரியாத நாயகன்
. சொன்னசொல் மீறாதவன்
வாரிக் கொடுத்திடும் வள்ளமை கொண்டவன்
. வல்லவன் வில்லின்வீரன்
வாய்மை தெரிந்தவன் தீதென் றறிந்துமே
. வாய்பொத்தி நின்றதோழன்
பேரண னாகிடும் கவசத்தைப் போர்முன்னம்
. பெரிதிலை எனவிட்டவன்
பெருமைமிகு குடியிலே பிறந்தாலும் அறியாது
. பேதையைப் போல்பட்டவன்
தூரிகை இடையினள் துரியனின் மனைவியைத்
. தோழியாய் நினைத்ததீரன்
தோன்றிடும் பாரதக் கதையிலே கண்ணனைத்
. தொழவைத்த திந்தக்கர்ணன் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (6-Sep-17, 8:29 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 70

மேலே