நாற்காலியின் கண்ணீர்
ஊழல் என்பார்
லஞ்சம் என்பார்
பதவி என்றதும்
நண்பேன்டா என்று
நாற்காலி பிடிப்பார்!
லட்சியத்தை கொல்வார்
அதை மின்தகனம் செய்வர்
வெட்கம் சிறிதுமின்றியே
சவ வீட்டின்
பாதாளம் வரை பாய்ச்ச முயல்வார்
நாங்கள் போராடினோம் என்பார்
ஆனால் மண்டியிட்டு மானமிழந்து
ஓட்டு கேட்பவன் காலில் விழுந்து
புது வரலாறு படைப்பார்
மண்டியிட்டு மானமிழந்து
காலில் விழுந்துகிடப்போருக்கு
நாற்காலி எதற்கோ?