காதல் போதை

மழையினை மதுவாகக் குடித்து
ஆர்ப்பாட்டம் செய்யும் தவளையாய்
என் காதல் இதயம்!
உன் சுவாசம் குடித்து
போதையில் ஆர்ப்பாட்டம் செய்கின்றதே
புரியவில்லையா ?
என் காதல் என் அன்பே!

நீரில்லாமல் மீன் துடிக்க
நீ இல்லாமல் என் இதயம் வெடிக்க!

உன் விழிதனைக் கண்டு என் வழிதனை
மறந்தேன்!

போதை பழக்கம் இல்லாதவனை
பாதை மாற்றியக் கள்ளியே!

உன் கைப் பிடிக்கும் ஆசையில் தல்லாடி
வருகிறேன்...........

உணக்காக நான் நானாகவே
ரா ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (8-Sep-17, 12:24 am)
பார்வை : 423

மேலே