என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 21

நேரம் முன்னேறாமல் தவித்தது ப்ரவீனுக்கு. விஜிக்கும் அதே நிலைமை தான்.தண்ணீர் குடிக்க போவதை போல் அந்த பக்கம் போவதும் பாத்ரூம் போவது போல் போவதும் அப்படியே பிரவீனை பார்த்துவிட்டு போவதும் வருவதுமாக இருந்தாள் விஜி. அந்த தவிப்பு.....பேசவேண்டும் போலவும் இருந்தது, பேசக்கூடாது எனவும் இருந்தது. ப்ரவீனோ தனது போனில் ஸ்நேக் கேம் விளையாடியபடியே படுத்திருந்தான்.

ஒரு முறை, புவனா தண்ணீர் குடிக்க வரவே, பிரவீனை பார்த்து "என்ன பிரவீன், தூங்கலையா" என்று கேட்டாள்.

"இல்ல ஆன்டி,புது இடம், தூக்கம் வரல" என்றான் பிரவீன்.

"ஓ, சரி சரி" என்று பேசிக்கொண்டிருக்கும்போதே தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்த விஜி அங்கு எதேச்சையாக வருவது போல வந்து," என்னம்மா, என்ன பண்ற" என்று புவனாவிடம் கேட்க, "தண்ணி குடிக்கலாம் னு வந்தேன், பிரவீன் செல் போனை நோண்டிட்டு இருந்தான், அதான் தூங்கலையானு கேட்டேன்" என்று கூறிவிட்டு தண்ணீர் குடிக்க சென்றாள் புவனா.

"என்ன பிரவீன் தூக்கம் வரலையா" என்றாள் விஜி.

"இல்ல, புது இடம், அதான் தூக்கம் வரல" என்றான் பிரவீன்.

"சரி, ட்ரை பண்ணுங்க" என்றாள் விஜி.

"பழகின இடம்...உங்களுக்கே தூக்கம் வராம ஆறேழு வாட்டி இங்கயும் அங்கேயும் போய்ட்டு வந்தீங்க, உங்களுக்கே அப்டின்னா, எனக்கு எப்படி இருக்கும்" என்றான் பிரவீன்.

"நான்...நான்...தண்ணி குடிக்க போனேன்" என்றாள் விஜி.

"ஏழு முறை தண்ணியா, அதும் ரெண்டு மணி நேரத்துக்குள்ள, சக்கரை வியாதி காரங்க கூட இவ்ளோ டீஹைடிரேட் ஆகமாட்டாங்க" என்றான் பிரவீன்.

"ஹலோ, ரொம்ப பேசாதீங்க, சம் டைம்ஸ் வாஷ் ரூம்க்கு போயிட்டு வந்தேன்" என்றாள் விஜி.

"சமாளிக்காதிங்க, நம்பறேன்" என்றான் பிரவீன்.

வெட்கத்துடன் ஒரு புன்னகை விஜியின் முகத்தில்.

தண்ணீர் குடித்துவிட்டு வந்தாள் புவனா.

"என்ன விஜி, என்ன சொல்லறான் பிரவீன்" என்றாள் புவனா.

"புது இடமாம், தூக்கம் வரலயாம், இதெல்லாம் ஒரு ரீசன்" என்றாள் விஜி.

"ஏய், சும்மா இரு, நீ போய் தூங்கு, நாளைக்கு காலேஜ் போகணும்" என்றாள் புவனா.

"ம்ம்ம், சரி" என்று கூறிவிட்டு போய் உறங்க சென்றனர் இருவரும்.

மறுநாள் காலை மணி ஐந்து, புவனா எழுந்து வந்தாள்.

அவள் எழுந்திருக்கும்போதே வாசலில் விளக்கு போடப்பட்டு இருந்தது. என்னவென்று பார்க்க வந்தாள்.

அங்கே பிரவீன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான்."என்ன பிரவீன், இவ்ளோ சீக்கிரமா எழுந்து எக்ஸர்சைஸ் பண்ணிட்டு இருக்க" என்றபடி வெளியே வந்தாள் புவனா.

"இல்ல ஆன்டி, எப்பவுமே காலைல நாலறைக்கு எழுந்துடுவேன், என் அம்மா சொல்லித்தந்த பழக்கம்" என்றான் பிரவீன்.

"நல்ல பழக்கம், பொதுவா பொண்ணுங்க தான் நேரத்தோட எழுந்து வீடு வாசல் பெருக்கி தண்ணி தெளிச்சு கோலம் போட்டு,....., ஹ்ம்ம், இங்க பாரு...எங்க வீட்டு மஹாராணிங்கள, எப்படி தூங்கறாங்க பாரு" என்றாள் புவனா.

"என்ன ஆன்டி, நீங்களும் ஆம்பள பொண்ணுங்க ன்னு பிரிச்சு பேசறீங்க, இந்த காலத்துல அப்டி பொண்ணுங்க தான் மொதல்ல எழுந்து வீடு வேலை எல்லாம் செய்யணும் னு சொல்லிக்கிட்டு, அவங்க என்ன அடிமையா" என்றான் பிரவீன்.

"அப்பா பாரதி...விடுப்பா, எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. "என்றபடி உள்ளே சென்றாள் புவனா.

உடற்பயிற்சி முடித்துவிட்டு கைகளாலேயே பல் துலக்கிவிட்டு குளித்து ரெடி ஆயிருந்தான் பிரவீன். அப்போது தான் விஜி எழுந்து வந்தாள். பிரவீன் இருப்பதை மறந்து நைட்டியை முழங்கால் வரை தூக்கி கட்டிக்கொண்டு அரை தூக்கத்தில் "அம்மா, இன்னிக்கு என்ன டிபன்" என்றபடி தூங்கிக்கொண்டிருந்த அறையில் இருந்து வெளியே வர,

அங்கு பிரவீனை கண்டதும் ஒரு நிமிடம் சுதாரித்துக்கொண்டு, நைட்டியை இறக்கி விட்டுவிட்டு விருட்டென மீண்டும் அறைக்குள் வெட்கத்தோடு நுழைந்துகொண்டாள் விஜி.

உள்ளே சென்று கதவில் சாய்ந்துகொண்டு தனக்குள் தலையில் அடித்துக்கொண்டு சிரித்துக்கொண்டாள்.பிறகு நெளிந்துகொண்டே மீண்டும் வெளியே வந்தாள் விஜி.

"சாரி பிரவீன், நீங்க இருக்கறத மறந்துட்டேன், குட் மார்னிங்" என்றாள் விஜி.

"வெரி குட் மார்னிங்" என்றான் பிரவீன்.

"அம்மா எங்க" என்றாள் விஜி.

"அம்மா, வெளில கீரை விக்கறவங்க வந்திருக்காங்க, வாங்க போயிருக்காங்க" என்றான் பிரவீன்.

"ஓஹோ, சரி, வெயிட் பண்ணுங்க நான் போய் பிரஷ் பண்ணிட்டு வந்துடறேன்" என்றபடி ஓடிவிட்டாள் விஜி.

சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினான் பிரவீன்.

அரைமணி நேரம், ரம்யா எழுந்து அவளும் குட் மார்னிங் சொல்லி அனைவரும் ரெடி ஆகினர்.

"ரம்யா, நீ கெளம்பு, பஸ் வந்துடும்" என்றாள் புவனா.

"ம்ம்ம், சரி சரி, ஆல்ரெடி கிளம்பிட்டேன், பை மா, விஜி அக்கா, பை, பிரவீன்....பை பை. பாத்து ட்ரைவ் பண்ணுங்க, அடிக்கடி டைம் கிடைக்கும் போது பேசுங்க" என்றபடியே கிளம்பினாள் ரம்யா.

கால் மணி நேரம் கடந்திருக்கும், ப்ரவீனுக்கும் விஜிக்கும் பூரி பரிமாறினாள் புவனா.

"விஜி உனக்கும் லேட் ஆகுது, கெளம்பு, காயத்ரி வெயிட் பண்ணுவா" என்றாள் புவனா.

"விஜி, நீங்க எப்படி காலேஜ் போவீங்க" என்றான் பிரவீன்.

"பஸ் ல தான்" என்றாள் விஜி.

"நான் டிராப் பண்ணிட்டு போறேன், போற வழி தான" என்றான் பிரவீன்.

விஜி புவனாவை பார்த்தாள்.

புவனா கண்களாலேயே சரி என்று சொல்ல, மகிழ்ச்சியுடன் "சரி டிராப் பண்ணுங்க, நான் காயத்ரி கிட்டயும் சொல்லிடறேன்" என்றபடி போனை கையில் எடுத்தாள் விஜி.

"எதுக்கு சொல்லணும், ஆஸ் யூசுவல் கெளம்பி இருக்க போறாங்க, போய் பிக்கப் பண்ணப்போறோம்" என்றான் பிரவீன்.

"ஆமாம், அதும் சரி தான்" என்றபடி விஜி போன் செய்யாமல் விட்டாள்.

இருவரும் கிளம்பினார்.

"ஆன்டி நான் போய்ட்டு வரேன், கடலூர் வந்தா சொல்லுங்க" என்றான் பிரவீன்.

"கண்டிப்பா, பாத்து ட்ரைவ் பண்ணுப்பா" என்றாள் புவனா.

கார் கிளம்பி காயத்ரி வீட்டின் முன்பு நின்றது.

கார் ஹாரனை கேட்ட காயத்ரி வெளியே வந்து பார்த்தாள்.

"என்ன பிரவீன் அண்ணா, நைட் எங்க........? விஜி வீட்லயே தங்கிடீங்களா?" என்றாள் காயத்ரி.

"ஆமாம் காயத்ரி, விஜி அம்மா தான் நைட் ட்ரைவ் வேணாம் னு சொன்னாங்க" என்றான் பிரவீன்.

"ஏய் லூசு விஜி, சொல்லிருந்தா நானும் நைட் உங்க வீட்டுக்கு வந்து இருந்திருப்பேன் இல்ல, நெறய பேசினீங்களா" என்றாள் காயத்ரி.

"என்ன பேசினோம், ஒரு வார்த்தை கூட பேசிக்கல" என்றாள் விஜி.

"சரி சரி வாங்க, நேரம் ஆகுது" என்றான் பிரவீன்.

விஜி முன்னால் அமர்ந்திருக்க காயத்ரி பின்னால் அமர்ந்துகொள்ள, கார் கிளம்பி செல்ல தொடங்கியது.

"விஜி, அம்மா எப்படி ஒத்துக்கிட்டாங்க?" என்றாள் காயத்ரி.

"நானே நம்பலை...அம்மா அப்டி சொல்லுவாங்க ன்னு" என்றாள் விஜி.

ஐந்தே நிமிடத்தில் கார் காலேஜை அடைந்தது.

காரில் இருந்து இருவரும் இறங்கினர்.

"சரி பிரவீன், நீங்க கிளம்புங்க, ரொம்ப தேங்க்ஸ், மறக்காம ரீச் ஆனதும் எனக்கு போன் பண்ணுங்க.அது மட்டும் இல்ல, அடிக்கடி போன் மெசேஜ் பண்ணுங்க, அம்மா சொன்னது போல உங்க பிரெண்ட்ஸ் எல்லாரையும் கூட்டிட்டு வாங்க ஒரு நாள்" என்றாள் விஜி.

"கண்டிப்பா, அப்டியே நீங்களும் மறக்காம நாளைக்கு விழுப்புரம் கூட எங்க மேட்ச் பாக்க வாங்க" என்றான் பிரவீன்.

"ட்ரை பண்றேன் பிரவீன், பட் நாட் கன்பார்ம்" என்றாள் விஜி.

சிரித்துக்கொண்டே "சரி சரி" என்றான் பிரவீன்.

"ஓகே, காயு, போலாமா" என்றாள் விஜி.

"ம்ம். ஓகே, அண்ணா, பை, விஜிக்கு மட்டும் இல்ல, எனக்கும் அடிக்கடி கால் பண்ணுங்க, மெசேஜ் பண்ணுங்க" என்றாள் காயத்ரி.

அப்போது அவர்களின் முன்னே இன்னொரு கார் வந்து நிற்க, "அதிலிருந்து ரோஸெலின் இறங்கி வந்தாள்,"ஹாய் ரோஸ், ஹாப்பி பர்த்டே" என்றாள் விஜி. காயத்ரியும் "ஹேப்பி பர்த்டே டி" என்றாள்.

"தேங்க்ஸ் டி, கண்டிப்பா இன்னிக்கு பார்ட்டிக்கு வரீங்க இல்ல" என்றாள் ரோஸெலின்.

"கண்டிப்பா டி" என்றனர் இருவரும்.

"ஆமாம், இது யாரு" என்று கேட்டாள் ரோஸெலின்.

"இது பிரவீன், என் பிரென்ட், பிரம் கடலூர், பெரிய கிரிக்கெட் பிளேயர்" என்றாள் விஜி.

"ஓ அப்டியா, ஹலோ அண்ணா' என்றாள் ரோஸெலின்.

"ஹலோ ரோஸெலின், ஹேப்பி பர்த்டே" என்றபடி கை கொடுத்தான் பிரவீன்.

"தேங்க்ஸ் அண்ணா" என்றபடி ரோசெலினும் கை கொடுக்க காயத்ரி ரொசோலினிடம் "இவரு நாளைக்கு நம்ம விழுப்புரம் டீம் கூட மேட்ச் விளையாட போறாரு" என்றாள்.

"ஏய், எங்க அண்ணாவும் நாளைக்கு மேட்ச் விளையாட போறாரு, அண்ணா, நீங்க கடலூர் கு வெளயாடுறீங்களா" என்றாள் ரோஸெலின்.

"ஆமாம், உங்க பிரதர்?" என்றான் பிரவீன்.

"ஆமாம்,என் பிரதர் விழுப்புரம் டீம் கு வெளயாடுறாரு, பேரு டேவிட்" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே காருக்குள் இருந்து ஓட்டி வந்த டேவிட் இறங்கி வந்தான்.

"ஹாய் விஜி, ஹாய் காயத்ரி, எப்படி இருக்கீங்க" என்றான் டேவிட்.

"நல்லா இருக்கோம், நீங்க?" என்றாள் விஜி.

"நல்லா இருக்கேன், சரி, இன்னிக்கு ரோஸெலின் பார்ட்டிக்கு வரீங்க இல்ல, ஷல் ஐ பிக் யு பிரம் வளவனூர்?" என்றான் டேவிட்.

"இல்ல வேணாம், நாங்க பஸ் ல வந்துடறோம்" என்றாள் காயத்ரி.

"ஓகே ஓகே" என்றான் டேவிட்.

"அண்ணா, இது பிரவீன், கடலூர் டிஸ்ட்ரிக்ட் கிரிக்கெட் டீம் கேப்டன்.நாளைக்கு இவங்க டீம் கூட தான் உங்களுக்கு மேட்ச்" என்று காயத்ரி கூறியது தான் தாமதம். டேவிட்டின் முகத்தில் இருந்த சிரிப்பு முழுவதும் மாறியது.

"ஓஹ் அப்டியா, ஓகே ஓகே" என்று மெத்தனமாக சொல்லிவிட்டு பிரவீனை பார்த்து ஒரு புன்னகை கூட செய்யாமல் நின்றான் டேவிட். அவனை கண்டுகொள்ளவே இல்லை.

இது விஜிக்கும் காயத்ரிக்கு என்னவோ போல் இருந்தது.

அனால் ப்ரவீனோ சிரித்த முகத்தோடு, ஹாய் டேவிட், ஆல் தி பெஸ்ட்,நல்லா விளையாடு, லாஸ்ட் மேட்ச் ல சூப்பரா பௌலிங் போட்ட நீ, பட் நீ ரொம்ப ஈஸியா டென்சன் ஆய்டற, உன்னை டென்சன் ஆக்கிட்டா நீ கோவத்துல தப்பா பால் போடுற, வேகமா போடுற,, பட் மேக்சிமம் புல் லெங்த் போடற. எங்க டீம் ல எல்லாருமே புல் லெங்த் பால் நல்லா வெளயாடுவாங்க, இந்த டைம் குட் லெங்த் ட்ரை பண்ணு" என்றபடி டேவிட் க்கு கை கொடுக்க கையை நீட்டினான்.

"எல்லாம் எனக்கு தெரியும், நாளைக்கு பாரு....ரொம்ப பேசத் தேவை இல்ல " என்று கையை தட்டி விட்டுவிட்டு கோபமாக "ஓகே ரோஸெலின், நீ கெளம்பு, பை விஜி, பை காயத்ரி" என்றபடி காரை எடுத்துக்கொண்டு வேகமாக கிளம்பிவிட்டான் டேவிட்.

விஜிக்கும் காயத்ரிக்கும் தூக்கி வாரி போட்டது, இதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

"அண்ணா, அவன் அப்படி தான், கோவப்படுவான், நீங்க தப்பா நெனைக்காதிங்க அண்ணா, நீங்களும் என் பர்த்டே பார்ட்டிக்கு வாங்க அண்ணா" என்று பாசமாக அழைத்தாள் ரோஸெலின்.

"ட்ரை பண்றேன் மா, பட் நாட் கன்பார்ம்" என்றான் பிரவீன்.

"அண்ணா...என்ன விஜியோட டயலாக் போல இருக்கு" என்றாள் காயத்ரி.

அனால் டேவிட்டின் செயலில் இருந்த வந்த ஆத்திரத்தில் இருந்து விஜி மீளவே இல்லை.

"சரி காயு, நீயும் ரோசெலினும் கிளம்புங்க, நான் வரேன்" என்று காயத்ரியிடம் போகுமாறு கண்களால் சைகை காட்டினாள் விஜி.

புரிந்துகொண்ட காயத்ரி "சரி ரோஸலின் வா நம்ம போகலாம்" என்றபடி ரோசெலினை கூட்டிக்கொண்டு சென்றாள்.

அவர்கள் சென்றதும், "ஹலோ, நீங்க என்ன பெரிய ஆளா, நாளைக்கு அவன் உங்ககூட விளையாட போறான், அவன்கிட்ட போய் உங்க டீமோட பிளஸ் அண்ட் மைனசை சொல்றீங்க, தோத்துபோய்ட்டிங்கன்னா?" என்றாள் விஜி.

அவள் முகம் கோபத்தில் சிவந்திருந்ததை பிரவீன் உணர்ந்தான்.

"இல்ல, ஒரு அட்வைஸ்...." சொல்லி முடிப்பதற்குள் "மூடுங்க, நான்சென்ஸ்,இடியட்.....நாளைக்கு தோத்தா தான இருக்கு உங்களுக்கு" என்றாள் விஜி.

"விஜி, இப்போ எதுக்கு இவ்ளோ கோவம், என்ன நடந்துச்சு" என்றான் பிரவீன்.

"அவன் பெரிய புடுங்கி மாதிரி உங்ககிட்ட பேசிட்டு கை கூட குடுக்காம போறான், அவன் அவ்ளோ கோவத்தை காட்டும்போது நீங்க சூடு சொரணையே இல்லாம சிரிச்சுகிட்டே இருந்தீங்க, எனக்கு செம டென்சன் ஆச்சு, நீங்க ரியாக்ஷன் தரவே இல்ல...அத பாத்ததும் அவன்மேல் வந்த கோவத்தை விட உங்கமேல கோவம் பொத்துக்கிட்டு வந்துச்சு நெறையா" திட்டி தீர்த்தாள் விஜி.

"ஹலோ, நான் தான் டென்சன் ஆகணும், நானே அமைதியா இருக்கேன், நீங்க ஏன் இவ்ளோ டென்சன் ஆகறீங்க" என்றான் பிரவீன்.

"ச்ச....என்ன ஜென்மமோ" என்றாள் விஜி.

"ஹலோ, இவ்ளோ கோவம் எதுக்கு, வேணும்னா ரெண்டு அறை அறைஞ்சுக்கோங்க" என்றான் பிரவீன்.
"என்ன, அரையமாட்டேன் னு நினைக்கிறீங்களா" என்றபடி அறைந்துவிட்டாள் விஜி. என்னதான் கோவமான அறையாக இல்லை என்றாலும் பிரவீன் இதை எதிர்பார்க்கவே இல்லை.

"என்னங்க சட்டுனு அறைஞ்சுடீங்க" என்றான் பிரவீன்.

"ம்ம்ம், பின்ன...போங்க...என்கிட்ட பேசாதீங்க, பை, எனக்கு டைம் ஆயிருச்சு, நான் கிளம்பறேன்" என்றபடி விஜி கிளம்பினாள்.

விஜி அறைந்ததை தூரத்தில் இருந்து பார்த்த காயத்ரி ஒன்றும் புரியாமல் தவித்தாள்.

பிரவீனின் கார் கடலூர் நோக்கி பயணத்தை தொடங்கியது. தனக்குள் சிரித்தபடியே காரை செலுத்தினான் பிரவீன்.

காரில் அந்த நேரம் காதல் திரைப்படத்தில் இருந்து "எங்கே நான் போனாலும் என் வாழ்வில் என்றும் உன் நிழலில் இளைப்பாற வருவேன் பெண்ணே..." என்ற பாடல் ஓடவே....சத்தத்தை அதிகமாக வைத்தபடியே கடலூர் நோக்கி பயணப்பட்டான் பிரவீன்.

அந்த நிறம் அவனுக்கு முபாரக்கிடம் இருந்த போன்," டேய், எந்த ஷிப்ட் டா இன்னிக்கு" என்றான் முபாரக்.

"இன்னிக்கு ரொட்டேஷனல் ஆப் டா, நாளைக்கு மேட்ச் கு லீவு போட்டுட்டேன்" என்றான் பிரவீன்.

"ம்ம்ம், சரி டா, அப்டின்னா சீக்கிரமா ஒரு விஷயம் பண்ணு, கடலூர் மஞ்சக்குப்பம் ஸ்டாண்ட் ல நாளைக்கு ஒரு சுமோ ரெண்ட் கு சொல்லிடு, மேட்ச் கு போகணும். அதுல ஏழு பேரு, நம்ம வண்டி ல அஞ்சு பேரு...விழுப்புரம் மேட்ச் கு, ஓகேவா? என்றான் முபாரக்.

"இல்ல டா, நாளைக்கு ஒரு மஹிந்திரா மாக்ஸி கேப் சொல்லிடலாம். ஏன்னா நான் மேபி இன்னிக்கு நைட் காரை எடுத்துட்டு பண்ருட்டி போனாலும் போவேன், விஜியோட பிரென்ட் கு பர்த்டே பார்ட்டி இருக்கு....காரை எடுத்துட்டு போலாம் இல்ல???" என்றான் பிரவீன்.

"டேய்...என்னடா கேள்வி இது.....கார் வேணும் னு சொல்லு அவ்ளோ தான், எடுத்துட்டு போலாம் இல்ல....? என்ன இது கேள்வி, என்னிக்கு டா நான் நீ கேட்டு வேணாம் னு சொல்லிருக்கேன், எரும மாடு" என்றான் முபாரக்.

"சரி மச்சி, அப்போ நான் மாக்ஸி கேப் சொல்லிடறேன். காலைல ஏழு மணிக்கெல்லாம், நம்ம ஸ்டேடியம் ல இருந்து பிக்கப். ஓகே???" என்றான் பிரவீன்.

"ஓகே டா,அப்டின்னா நீ ஒண்ணு பண்ணு, பண்ருட்டி போறத்துக்கு முன்னாடி ரகு வீட்ல இருந்து நர்கீச விழுப்புரத்துல விட்டுடு." என்றான் முபாரக்.

"ஏண்டா, உன் ஆள நீ போய் விடு டா" என்றான் பிரவீன்.

"டேய்...இது ஓவர் டா, சரி நானே விட்டுக்கறேன்.பை டா.இப்போ எங்க இருக்க" என்றான் முபாரக்.

"பட்டாம்பாக்கம் வந்துட்டேன்" என்றான் பிரவீன்.

"சரி சரி, பாத்து வா, போய் வீட்ல ரெஸ்ட் எடு" என்றான் முபாரக்.

கார் சீரான வேகத்தில் கடலூரை நெருங்கியது.

பகுதி 21 முடிந்தது.

-----------------தொடரும்-------------------

எழுதியவர் : ஜெயராமன் (7-Sep-17, 8:26 pm)
சேர்த்தது : நிழலின் குரல்
பார்வை : 285

மேலே