தீக்குளித்த சிறகுகள்

கருமேகம் ஊர்ந்து வந்தது.
காற்றில் இடறி மழை பொழிந்தது..
ஒரு பறவை பறந்து சென்றது..
வழியில் மழையால் மாட்டி கொண்டது.
தெருவில் இறங்கி தனியாய் நின்றது..
நனைந்த சிறகுகளை விரிக்க பிராயாசப்பட்டு கொண்டது..
குளிரின் படபடப்பை சிலிர்ப்புகள் நகலெடுத்தது.
நடுக்கம் போக்க தள்ளாடி நகர்ந்து நெருப்பருகே சென்றது..
நெருப்பிலே ஏற்கனவே ஓர் பறவை தவறி தீய்ந்து கிடந்தது..
நடுக்கம் இன்னும் அதிகமாகியது..

குளிரில் உடல் விறைத்தது..
அலகுகள் பிரார்த்தனை பன்னியது..
பின்னோக்கி கால்களை இழுத்து சப்தமில்லாமல் தவழ்ந்து சென்றது..
பழைய இடத்திலேயே தன்னை நிறுத்தி கொண்டது..
இம்முறை பறக்க நினைத்தது..
முயற்சித்து கீழே விழுந்தது..
குருதி கொட்டியது..
கூக்குரலிட்டது..
நிசப்தம் நிலவியது...
திரும்பி பார்த்தது..

பாடையில் பிணமொன்று கூட்டத்தை திரட்டி வந்தது..
மிதிபட்டால் செத்துடுவோமென அஞ்சி நின்றது..
ஒதுங்கி கடந்து சென்றனர்..
சதையை சிதையிலிட்டு திரும்பி வந்தனர்..
கூட்டதிலொருவன் காலில் விழுந்தது..
தூக்கி சென்றனர்.
பாடை இல்லாதிருந்தது..
கூண்டில் அடைத்தனர்..
உணவு கொடுத்தனர்..
உயிரை மீட்டனர்..

சுதந்திரம் போனது..
உறவுகளை இழந்தது..
சிறகுகள் செயலிழந்தது..
நரக வேதனையடைந்தது.

மீண்டுமொரு பெரு மழை வந்தது..
வெள்ளம் சூழ்ந்தது..
கூண்டை அடித்து சென்றது.
கதவு திறந்தது..
ஊரோரத்தில் உடல் ஒதுங்கி கிடந்தது.
ஈக்கள் மொய்த்தது..
எறும்புகள் புசித்தது..
கரையான் அரித்தது..
ஒன்றுமில்லாமலானது..
பறவை வாழ்ந்ததுகான அடையாளம் அழிக்கப்பட்டிருந்தது.

மீண்டுமொரு மழை..
மீண்டுமொரு பறவை..
மீண்டுமொரு கூண்டு..
மீண்டுமொரு உபசரிப்பு..
மீண்டுமொரு நரகம்..

பறவையும் மனிதனும் மட்டும் வெவ்வேறு...

எழுதியவர் : சையது சேக் (7-Sep-17, 4:05 pm)
பார்வை : 224

மேலே