விடிஞ்சது போ
பழங்கால வழக்கங்களை வாழ்ந்து வரும் ஒரு பெரியவர் தன பெண்ணுக்கு ஜாதகம் கேட்க தன்
வீட்டை விட்டு அவர் வழி படும் முருகனை வேண்டிக் கொண்டே பஸ் ஸ்டாண்டுக்கு வந்தார். வழி
நெடுக முருகனை வேண்டி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து நின்று கொண்டு இருந்தார்.
பத்து நிமிழம் ஆனதும் அவர் மயிலாப்பூர் போக வேண்டிய பஸ் வந்தது.பஸ் காலியாக
இருந்தது.சந்தோஷப பட்டு கிட்டேபஸ்ஸில் ஏறி எதிரில் இருந்த காலியான ஒரு ஸீட்டில்
உட்கார்ந்து கொண்டார். எதிரில் இருந்த கண்டக்டர் அவர் உட்கார்ந்து கொண்டு இருந்த இடத்தில்
இருந்து கொண்டே " எங்கே போறீங்க" என்று கேட்டார்.தேள் கொட்டியது போல இருந்தது
பெரியவருக்கு.
உடனே அவர் " விடிஞ்சது போ. நான் போற வேலை எங்கே நடக்க போவுது.நான் ஒரு
முக்கியமான வேலைக்கு போவும் போது இப்படி அப சகுனமா கேக்கறே" "என்று கத்தினார்.
கண்டக்டர் உடனே "பெரியவரே,நான் அப்படி கேட்டதுனாலே உங்க வேலை நடக்குமா
நடக்காதான்னு எனக்கு தெரியாதுங்க.நான் அப்படி கேக்காட்டா என் வேலை போயிடுங்க" என்று
நிதானமாக சொன்னார்.
கண்டக்டருக்கு பெரியவர் சொன்னது புரியலே,பெரியவருக்கு கண்டக்டர் சொன்னதது புரியலே!!!!!
இல்லையாங்க ????
u
"
.
.
.