போர்க்களம் - 6

பாகம் - 6

சமுத்திரா அந்த பெரியவருக்கு தேவையான உதவிகளை செய்து அவரின் நம்பிக்கையை பெருக்கினான். இரண்டு நாட்களுக்கு பிறகு அந்த பெரியவருடன் சேர்ந்து ஆர்யவர்தா தீவின் முக்கிய சந்தைக்கு சென்றான். அந்த பிரமாண்ட சந்தைதான் ஆர்யவர்தா தீவின் மைய்ய பகுதி.
சந்தையை வந்தடைந்ததும், அங்கே கட்டப்பட்டிருந்த கட்டிடங்களின் கட்டுமான பணியை பார்த்து சமுத்திரா வியந்தான். மேலும் ஆரியவர்தா தீவில் மூன்று இனத்தவர் மற்றும் பல மொழிகளும் கலந்திருந்தன, என்றாலும் அனைத்து மக்களும் ஒற்றுமையோடு சந்தையை மகிழ்ச்சியாக சுற்றி திரிவதை பார்த்து கேள்விக்குள்ளானான்.
பொறுக்க முடியாமல், அந்த பெரியவரிடம் சமுத்திரா கேட்டான்.
எப்படி பெரியவரே இங்கே எல்லா மக்களும் இனத்தால் வேறு பட்டிருந்தாலும் ரொம்ப ஒற்றுமையோடு இருக்காங்க?
அதுக்கு அந்த பெரியவர் சொன்னார்.
அதற்கு காரணம் எங்கள் மன்னர் பரதரின் செம்மை மிகுந்த ஆட்சி. அவரின் தந்தையை போலவே அவரும் சிறப்பாக ஆட்சி புரிவதால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் வந்ததில்லை. வறட்சி, பஞ்சம் என்பதை இன்று வரை நாங்கள் அறிந்ததில்லை என்று மெகிழ்ச்சியோடு கூறினார். மேலும் இன்னையிலிருந்து பத்தாம் நாள் நாங்கள் எதிர்பாத்திருந்த உச்ச திருவிழா நடைபெற உள்ளது, திருவிழாவில் அனைத்து இனத்தவரும் கலந்து கொண்டு ஒவ்வொருவரும் செய்த உணவுகளை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பர். இறுதியில் மன்னரும் மந்திரிகளும் மக்களோடு மக்களாக கலந்து அந்த விழாவை சிறப்பிப்பர் என்று கூறினார்.
அதை கேட்ட சமுத்திராவுக்கு சிறந்த யோசனை தோன்றியது. அந்த இறுதி நேரத்தில் மக்களோடு மக்களாக கலந்திருக்கும் மந்திரி சந்திரவனை கொன்று விட வேண்டும் என முடிவு செய்தான். ஒரு வாரம் கழித்து அந்த செய்தியை மற்ற மூவரிடமும் பகிர்ந்து கொண்டு, உச்ச திருவிழாவுக்காக காத்திருந்தனர்.
உச்ச திருவிழா கோலாகலமாக தொடங்கிகியது. மக்கள், கூட்டம் கூட்டமாக மகிழ்ச்சியோடு சந்தையை சுற்றி திரிந்தனர். அதே நேரம் சமுத்திராவும் மற்ற மூவரும் மக்களோடு மக்களாக கலந்து, தங்களுக்கு சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்ததுபோல் ஆர்யவர்தா தீவு மன்னன், மந்திரிகள் மற்றும் அரச குடும்பத்தினர் விழாவில் மகிழ்ச்சியோடு பங்கேற்றனர்.
சமுத்திராவுக்கு எவ்வாறு சந்திரவனை அடையாளம் கொள்வது என்பது தெரியவில்லை. ஆனால் அதிர்ஷ்ட வசமாக ஊர்வலமாக வந்து மேடையில் அமரும் ஒவ்வொருவரையும் மக்கள் பேர் சொல்லி வாழ்த்தினர். அதன் மூலம் மன்னருக்கு பின் வந்து அமர்ந்த சந்திரவனை அடையாளம் கொண்டான்.
அவர்கள் நால்வரின் திட்டப்படி, சந்திரவன் மக்களோடு மக்களாக இணையும் பொழுது கூட்டத்தில் அவனை குத்தி கொலை செய்ய வேண்டும் என்பதுதான். அதேபோல் சந்திரவன் மேடையை விட்டு கீழ் இறங்கி மக்களோடு இணைந்து உணவருந்தும் வேலையில், நால்வரின் ஒருவன் அவனை குத்த முட்படுகிறான். ஆனால் சந்திரவனோ அதை லாவகமாக கையாண்டு கத்தியை அவன் கைக்கு மாற்றுகிறான், அதே நேரத்தில் மற்ற இருவர் அவனை தாக்க முயட்சிக்க அதையும் மரித்து அவர்களை கீழே விழ செய்கிறான். பிறகு மூவரும் காவலாளர்களால் கைது செய்யபட்டனர்.
மூவரும் கைதி செய்யப்பட்டதால் சமுத்திரா அமைதியாக அவ்விடத்தில் இருந்து நகர்ந்தான். எப்படியும் நமக்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கும் அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணி அவ்விடத்தில் இருந்து புறப்பட்டான்.

எழுதியவர் : (7-Sep-17, 8:51 pm)
சேர்த்தது : Selvakumar
பார்வை : 132

மேலே