என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 22
"விஜி, எதுக்கு நீ பிரவீனை அடிச்ச" என்றாள் காயத்ரி.
"நீ பாத்துட்டியா" என்றாள் விஜி.
"ஆமாம், என்ன ஆச்சு?" என்றாள் காயத்ரி.
"இல்ல டி, அந்த டேவிட் பெரிய இவன் மாதிரி பேசறான், கோவப்பட்டு ரொம்ப ஹார்ஷா பிஹேவ் பண்ணான், இந்த பிரவீன் லூசு அவன்கிட்ட போய் டீமோட இன்பார்மேஷன் எல்லாத்தயும் குடுக்கறான், முபாரக் அண்ணா சொன்ன மாதிரி அவன் ஓவர் காண்பிடண்ட் தான், மூணு பொண்ணுங்களுக்கு முன்னாடி ஒருத்தன் இன்சல்ட் பண்ரான், அப்டியே மரம் மாதிரி சிரிச்சுகிட்டே ஹாய் னு கை குடுக்கறான், அதான் சூடு சொரணையே இல்லையானு அறைஞ்சேன்" என்றாள் விஜி.
"பிரவீன் அண்ணாவை அடிக்க உனக்கு என்ன விஜி உரிமை இருக்கு" என்றாள் காயத்ரி.
சற்றே தடுமாறிவிட்டாள் விஜி.
"ஆமாம் காயத்ரி, நான் ஏன் அப்டி பண்ணினேன், அவனுக்கே வராத கோவம் எனக்கு ஏன் வந்தது, புரியல காயத்ரி" என்றாள் விஜி.
"புரியணும், யோசி, பட் எனக்கும் அந்த டேவிட் அப்டி பிஹேவ் பண்ணப்போ பயங்கர கோவம் வந்தது. எனக்கு என்னன்னா, ரோஸெலின் கு முன்னாடி ரெண்டு பேரும் சண்டை போட்டுக்குவாங்களோ, அப்டி நடந்தா நமக்கு தர்ம சங்கடமா போயிருக்கும், பட் காட்ஸ் கிரேஸ், அப்டி ஒண்ணும் நடக்கல"என்று பெருமூச்சு விட்டாள் காயத்ரி.
"ஆமாம், நான் கூட அப்டி தான் யோசிச்சேன், பட் ஐ திங்க் நான் பிரவீனை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் " என்றாள் விஜி.
"சரி, போன் பண்ணி சாரி கேட்டுக்கலாம், இப்போ ப்ராக்டிக்கல்ஸ் ஆரம்பிக்க போகுது டி, அந்த லூசு வந்துடுவான், என்ன பிளானோட வாரான் னு தெரிலயே" என்றாள் காயத்ரி.
"பாத்துக்கலாம் டி" என்றாள் விஜி.
சற்று நேரத்தில் அந்த ட்ரைனி லெக்ச்சரர் செந்தில் உள்ளே வர, அனைவரும் எழுந்து நின்றனர்.
முதல் பத்து நிமிடம் அமைதியாக போனது வகுப்பு. பிறகு அவன் வேலையை காட்டத்தொடங்கினான்.
"காயத்ரி, கொஞ்சம் இங்க வாங்க" என்றான் செந்தில்.
"சொல்லுங்க சார்" என்றாள் காயத்ரி.
"உங்க ரெகார்ட் நோட் குடுங்க" என்றான் செந்தில்.
"ஒன் மினிட் சார்" என்றபடி ரெக்கார்டு நோட்டை கொடுத்தாள் காயத்ரி.
"அது இருக்கட்டும், காலைல யாரோ உன்னை கார்ல டிராப் பண்ணினாங்களே, யாரு அது" என்றான் செந்தில்.
பிரச்சனையை ஆரம்பிப்பதாக உணர்ந்தாள் காயத்ரி.
"அது விஜி பிரென்ட் என்று சொன்னால் தப்பிக்கலாம், ஆனால் விஜியை துன்புறுத்துவானோ" என்ற பயத்தில், சார், அது என் பிரென்ட் சார்" என்றாள் காயத்ரி.
"ஓ, கார்ல டிராப் பண்ற அளவுக்கு பிரெண்டா உனக்கு, அதும் விஜியையும் சேத்து ட்ராப்பிங்????ம்ம்ம்ம், பாத்து, காண்டாக்ட் சர்டிபிகேட் ல ரிமார்க் விழுந்திட போகுது" மறைமுகமாக தாக்கினான் செந்தில்.
"சார், அவரு ஜஸ்ட் வீட்டுக்கு தெரிஞ்சவரு சார், அவ்ளோ தான்" என்றாள் காயத்ரி.
"ம்ம்ம், சரி, போ" என்றான் செந்தில்.
"விஜி, ரொம்ப பண்ரான் டி, காலைல டிராப் பண்ணது யாருன்னு கேக்கறான், உன்னோட பிரென்ட் னு சொன்னா உன்னையும் வம்புக்கு இழுப்பானோன்னு என் பிரென்ட் னு சொல்லிட்டேன், உன்கிட்ட கேட்டா அதையே மைண்டைன் பண்ணு, ஏன்னா ஆல்ரெடி என்னை அவன் கார்னர் பண்ரான், அவன் இன்டென்ஸன் என்னன்னே தெரில, இதுல உன்னையும் கார்னர் பண்ணினான் னா????, அதான், எல்லாம் என்னோட போகட்டும் னு அப்படி சொல்லிட்டேன்" என்றாள் காயத்ரி.
"லூசா நீ காயத்ரி, ஏன் நீயா உன் பிரச்சனையை இன்னும் இன்னும் வளத்துக்கிட்டே போற" என்றாள் விஜி.
"என் தலை எழுத்து விஜி, அவன் இன்னும் ஆறு மாசம் தான் இங்க இருக்க போறான், எப்படியாவது சமாளிச்சுட்டா போதும், அதுக்குள்ள நம்ம எக்சாம்ஸ் வருது, இப்பவே என்னை காண்டாக்ட் சர்டிபிகேட் இன்டெர்னல் மார்க் அது இதுன்னு மெரட்டறான் டி, நான் அப்பாகிட்ட சொல்லலாம் னு பாத்தா, இவன் ஏதாவது என் ப்ராக்டிக்கல்ஸ் ல கை வெச்சுட்டா என் கரியரே போய்டும், என் அப்பா எவ்ளோ கடன் வாங்கி படிக்க வெக்கறாரு டி" அழுதாள் காயத்ரி.
"சரி காயத்ரி பீல் பண்ணாத, ஏதாவது தண்டனை கண்டிப்பா அவனுக்கு கடவுள் கொடுப்பாரு" என்றாள் விஜி.
"இல்ல விஜி, அவன் ரொம்ப கேவலமா எல்லாம் மெஸேஜ் பண்ரான். ரொம்ப கெட்ட வார்த்தைகள் எல்லாம் சொல்றான், தப்பி தவறி அப்பாவோ இல்லன்னா தம்பியோ பாத்துட்டா என்ன நடக்கும் டி, என்னப்பத்தி என்ன நினைப்பாங்க, அந்த லூசோட சுயரூபம் தெரியாம இனிஷியலா அவன்கூட நானும் ரொம்ப மெசேஜ் பண்ணிட்டேன் டி, இப்போ அந்த மெசேஜ் எல்லாத்தயும் கண்டிப்பா அவன் வெச்சுட்டு தான் இவ்ளோ பிளாக்மெயில் பண்ரான் டி, நீ எவ்வளவோ சொன்ன, அவனை பாத்தா ஆளு சரி இல்லன்னு, பட் நான் தான் நமக்கு பாடம் சொல்லி தரவரு தானேன்னு எதையும் யோசிக்காம, கொஞ்சம் டீப் ஆஹ் போய்ட்டேன், பட் இனிஷியலா நான் அழகா இருக்கேன், இன்னிக்கு என் டிரஸ் நல்லா இருந்துச்சு, விழுப்புரத்துல இப்டி ஒரு அழகு பொண்ணு...அப்டி இப்படின்னு அவன் சொல்லும்போது எனக்கு அந்த மாதிரி ஒரு அனுபவம் ரொம்ப புதுசாவும் ஈர்ப்பாவும் இருந்துது டி, நானும் அவன் ஹண்டசம்மா இருக்கான், நல்ல டிரஸ் கோட் அப்டி இப்டி ன்னு மெசேஜ் பண்ணித்தொலைச்சேன். பட் எப்போ நைட் எல்லாம் தூங்கவிடாம மெசேஜ் பண்ண ஆரம்பிச்சனோ அப்பவே தெரியும் ஹி இஸ் ட்ரீட்டிங் மீ இன் எ டிபேரெண்ட் ஆங்கிள் னு, ஒருநாள் என்னோட ஸ்ட்ரக்ச்சர் என்னோட கலர், காம்ப்ளெக்ஷன், என்கிட்டே புடிச்சது, என் லிப்ஸ் அது இதுன்னு ரொம்ப முகம் சுளிக்கற மாதிரி மெசேஜ் பண்ணினான் னு சொன்னேன் இல்ல, அன்னிக்கு நான் ரொம்ப சாதாரணமா - செந்தில் சார், இதேமாதிரி எல்லாம் எனக்கு மெசேஜ் பண்ணாதீங்க னு சொல்லிட்டேன், அன்னிலேந்து நான் அவனுக்கு மெசேஜ் பண்றத டோட்டலா நிறுத்திட்டேன், பட் அவன் இன்னும் டெயிலி டெய்லி அந்த மாதிரி ரொம்ப டூ மச்சா அனுப்பறான் டி,உன்கிட்ட சொல்லல, ஒரு டூ த்ரீ டேஸ் முன்னாடி நான் அன்னிக்கு ப்ளூ இன்னர் போட்டுட்டு வந்தேன், அது சுடிதார் பின் ல இருந்து வெளில தெரிஞ்சுது, ரொம்ப செக்சியா இருந்தேன் னு மெசேஜ் பண்ணான் டி, இப்டி எல்லாமா பிஹேவ் பண்ணுவாங்க, ரொம்ப பயமா இருக்கு டி, இந்த ஆறு மாசத்துக்குள்ள என்னோட ஆன்சிடிய ஏத்தி என்னை கொன்னுடுவான் டி அவன் . " என்றாள் காயத்ரி.
"காயத்ரி, சும்மா பயப்படாத, ஒண்ணு பண்ணு, சிம் மாத்திட்டு" என்றாள் விஜி.
"இல்ல டி, அப்பா ஏன் மாத்தணும் னு கேட்டா, நான் என்ன சொல்றது, பெட்டெர், சமாளிக்கறது தான்" என்றாள் காயத்ரி.
மீண்டும் காயத்ரியை உள்ளே கூப்பிட்டான் செந்தில்.
"என்ன காயத்ரி, இன்னிக்கு ஈவினிங் என்கூட டின்னெர் சாப்பிட வரியா...விழுப்புரம் போலாமா" என்றான் செந்தில்.
"இல்ல சார், அப்பா விட மாட்டாரு, நீங்க ஏன் இப்டி எல்லாம் பேசறீங்க சார் என்கிட்டே" என்றாள் காயத்ரி.
"ஓஹோ, அந்த பையன் .....டிராப் பண்ணானே..... அவன்கூடன்னா உன்னை அனுப்பி விடுவாரா, அப்டி என்ன இருக்கு அவன்கிட்ட" என்றான் செந்தில்.
"சார், நீங்க இப்டி எல்லாம் பேசறது நல்லா இல்ல சார், நீங்க எங்களுக்கு லெக்ச்சரர், ஒரு ஸ்டூடெண்ட் கிட்ட இப்டி எல்லாம் தப்பா நடந்துக்காதிங்க. எங்க பேரன்ட்ஸ் ரொம்ப கஷ்டப்பட்டு என்னை படிக்க வெக்கிறாங்க, ப்ளீஸ் சார், புரிஞ்சுக்கோங்க" என்றாள் காயத்ரி.
"ம்ம்ம், இந்த பிளாக் சுடிதார்ல செம்மையா இருக்க, அதும் கழுத்த ஒட்டி போட்ருக்கற ஷால்....அடடடா, போ, போய் கன்டின்னு பண்ணு" என்றான் செந்தில்.
நாக்கில் நரம்பில்லாமல் பேசும் அவன் வார்த்தைகள் காயத்ரியை மிகவும் புண் படுத்தியது. கழுத்தை ஒட்டி இருந்த ஷாலை மார்பை தாண்டி இழுத்து விட்டுக்கொண்டே வந்தாள் காயத்ரி. கண்கள் கலங்கி இருந்தன.
"காயத்ரி இப்போ எதுக்கு அழுதுட்டே வர. எல்லாரும் யஹப்பா நினைப்பாங்க காயத்ரி, என்ன ஆச்சு" என்றாள் விஜி.
"இல்ல விஜி, ஹி இஸ் க்ராஸிங் ஹிஸ் லிமிட்ஸ்." என்று கூறி கண்களை துடைத்துக்கொண்டாள் காயத்ரி.
"காயத்ரி, இந்த வீக் விடு, நெஸ்ட் வீக் என் அப்பா வரட்டும், ஏதாவது செய்வோம்" என்றாள் விஜி.
விஜி முடிக்கவும் பிரேக் டைம் வரவும் சரியாக இருந்தது.
விஜி ப்ரவீனுக்கு கால் செய்தாள்.
"ஹலோ பிரவீன், பத்திரமா போய் சேந்திங்களா" என்றாள் விஜி.
"ஹலோ, நான் முபாரக் பேசறேன் விஜி, நல்ல இருக்கீங்களா, நேத்து சேபா போய் சேர்ந்தீங்களா?" என்றான் முபாரக்.
"ஓ, முபாரக் அண்ணனா, சாரி அண்ணா, நான் பிரவீன் னு நெனச்சிட்டேன், சேபா வந்தோம் அண்ணா, பிரவீன் ரொம்ப நல்லா ஓட்டிட்டு வந்தாரு...சரி அண்ணா பிரவீன் எங்க?" என்றாள் விஜி.
"ஏன் மா, ஏதாவது முக்கியமா?" என்றான் முபாரக்.
"இல்லேண்ணா, காலைல கொஞ்சம் அவருகிட்ட கோவமா பேசிட்டேன் அதான்" என்றாள் விஜி.
"ஓ அதுவா, சொன்னான், ஓங்கி கன்னத்துல ஒன்னு விட்டீங்களாமே, அவனுக்கு இன்னும் குடுக்கணும் நீங்க, ரொம்ப ஓவர் காண்பிடண்ட் தான் அவன்...சொன்னான்..நடந்தது எல்லாத்தயும் சொன்னான்" என்றான் முபாரக்.
"பின்ன என்னண்ணா, அந்த டேவிட் லாடு மாதிரி பிஹேவ் பண்ரான், கோவப்படறான், கை குடுக்காம அசிங்கப்படுத்தறான், இந்த பிரவீன் அப்டியே சிரிச்சுகிட்டே நின்னாரு தெரியுமா, எனக்கும் காயத்ரிக்குமே கோவம் வந்துருச்சு, நீயே சொல்லு காயத்ரி," போனை லவுட் ஸ்பீக்கரில் போட்டாள் விஜி.
"ஆமாம் அண்ணா" என்றாள் காயத்ரி.
"அப்டியாம்மா, உங்களுக்கு தெரியாத பிஹைண்ட் தி ஸ்க்ரீன் நான் சொல்லட்டுமா" என்றான் முபாரக்.
"என்னண்ணா" கோரஸாக கேட்டனர் இருவரும்.
"அவன் கோவப்பட்டிருந்தா கூட பரவால்ல, கோவப்படாம சிரிச்சிட்டே இருந்தானா, அப்டின்னா அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா....இப்போ என்ன பண்ரான் தெரியுமா" என்றான் முபாரக்.
"என்ன அர்த்தம், என்ன பன்றாரு" என்றாள் விஜி.
"இப்பவே பிராக்டிஸ் கு போய்ட்டான், போன் இங்க கார்லயே இருக்கு, எப்படியும் த்யானம் அது இதுன்னு மனச ஒருநிலை படுத்திக்குவான், கோவத்தை புல்லா மனசுல அடக்கி வெச்சுட்டு இருப்பான்,நாளைக்கு மேட்ச் ல பாவம் அந்த டேவிட், செத்தான், கதற விட்ருவான், பெட்டெர், அவனுக்கு முடிஞ்சா சொல்லிடுங்க, நாளைக்கு பிரவீன் கு அவன் ஓவர் போட வேண்டாம் னு, அட்லீஸ்ட் பிரவீன் பால் ல பேட் பண்ண வேணாம் னு சொல்லுங்க. இப்போ என் ஓவர் கான்பிடென்ட் பதில் பாக்கரியாம்மா, கண்டிப்பா எழுதி வெச்சுக்கோ, அந்த பையன் நாளைக்கு கதற கதற தோப்பான், அவன் வாழ்க்கை ல இப்டி ஒரு புவர் பெர்பார்மன்ஸ் குடுத்துருக்கவே முடியாது" என்றான் முபாரக்.
"என்னண்ணா, சொல்றீங்க, அவ்ளோ கோவமா இருக்காரா இப்போ" என்றாள் காயத்ரி.
"ஆமாம், நாளைக்கு அந்த பையன ஓடவிடற வரைக்கும் அவன் கோவம் அப்டியே தான் இருக்கும்" என்றான் முபாரக்.
"இப்போ நான் பிரவீன் கிட்ட பேச முடியாதா அண்ணா" என்றாள் விஜி.
"ஓ கண்டிப்பா பேசணுமா, அப்டியே லைன் ல இருங்க, டேய்....மச்சி, ப்ரவீனுக்கு போன், விஜின்னு சொல்லு" என்று கதிரிடம் போனை கொடுத்தனுப்பினான் முபாரக்.
"டேய் பிரவீன், போன் டா உனக்கு" கதிர் பிரவீனிடம் கூற,
"கதிர், பிராக்டிஸ் பண்ணும்போது டிஸ்டர்ப் ஆகக்கூடாதுன்னு தான் போன் கார்லயே போட்டுட்டு வந்தேன், யாரு போன் ல" என்றான் பிரவீன்.
"விஜி டா" என்றான் கதிர்.
"ஓ விஜி யா, என்றபடி போனை வாங்கி பேசினான் பிரவீன்"
"சொல்லுங்க விஜி, பிராக்டிஸ் ல இருக்கேன்" என்றான் பிரவீன்.
"அது இருக்கட்டும் பிரவீன், கோவம் இல்லாத மாதிரி டேவிட் கிட்ட எதுக்கு நடிச்சீங்க, அட்லீஸ்ட் அவன் போனதும் நான் அரையரத்துக்கு முன்னாடி என்கிட்டயாவது சொல்ல வேண்டிது தான" என்றாள் விஜி.
"இல்ல, உங்ககிட்ட அடி வாங்கணும் னு தோணுச்சு அதுதான்" என்றான் பிரவீன்.
"சும்மா வெளயாடாதீங்க, நீங்க பயங்கர கோவமா இருக்கீங்கன்னு முபாரக் அண்ணா சொல்லிட்டாரு, இவ்ளோ கோவம் வர்ற நீங்க எதுக்கு டேவிட் கிட்ட காட்டல" என்றாள் விஜி.
"விஜி, நீங்க இன்னும் சின்ன புள்ள மாதிரியே இருக்கீங்க, டேவிட் அப்டி பிஹேவ் பண்ணும்போது அங்கேயே ரிப்ளை பண்றது ரொம்ப ஈஸி தான், ஆனா அதுனால என்ன பிரயோஜனம்? அங்க ஒரு பெரிய வாக்குவாதம் வந்திருக்கும். அது மட்டும் இல்ல, டேவிட் சிஸ்டருக்கு பர்த்டே. அவ உங்க பெஸ்ட் பிரென்ட். அவளுக்கு முன்னாடி அவளோட அண்ணன நான் சண்டைக்கு இழுத்து, அவன் கை கால உடைச்சு, அவன் என் மண்டைய ஒடச்சு...எதுக்கு இதெல்லாம், அவனோட முட்டாள் தனத்துக்காக நானும் முட்டாள் மாதிரி நடந்து சம்மந்தமே இல்லாத அந்த பிறந்தநாள் பொண்ண கஷ்டப்படுத்தி, உங்க பிரென்ட் தான நான், அவளோட அண்ணன அடிச்சு வம்பு வளத்தேன் னு உங்க பிரெண்ட்ஷிப் பிரிஞ்சு....இந்த காம்ப்ளிகேஷன் எல்லாம் வேணாம் னு தான். டேவிட் அவ்ளோ கோவமா பேசியும் அந்த பொண்ணு என்கிட்டே என்ன சொன்னா? அவன் அப்டி தான் அண்ணா, நீங்க என் பர்த்டே பார்ட்டிக்கு வாங்கன்னு இன்வைட் பண்ணா, அந்த நல்லா மனசுக்காக அவனுக்கு ஒரு நாள் மன்னிப்பு ன்னு வெச்சுக்கோங்களேன். உங்க கோவத்துக்கு மரியாதை குடுத்து நாளைக்கு அந்த பையன ஒரு வழி பண்ணிடலாம், வாங்க...நீங்களும் வந்து மேட்ச் பாருங்க, என்ஜோய் பண்ணுங்க, என்மேல இருக்கர கோவமும் மேட்ச் பாத்ததும் கொறஞ்சிடும்" என்றான் பிரவீன்.
"ச...நான் இதெல்லாம் யோசிக்கவே இல்ல பிரவீன். எதுக்கும் உடனே நான் ரியாக்ட் பண்றது தான் பெரிய தப்பு இல்ல?" என்றாள் விஜி.
"அது இருக்கட்டும், இன்னிக்கு ரோஸெலின் பார்ட்டிக்கு வரீங்களா நீங்க" என்றாள் காயத்ரி.
"கண்டிப்பா,ஏன்??" என்றான் பிரவீன்.
"இல்ல பிரவீன், வேணாம், அங்க டேவிட் இருப்பான். அது மட்டும் இல்ல, அவங்க டீம் புல்லா இருக்கும், நாங்களும் உங்ககூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது, ரோஸெலின் கூட இருக்கணும், ஏன்னா எங்க பிரெண்ட்ஸ் எல்லாரும் வருவாங்க, அவங்கள விட்டுட்டு வர முடியாது, அது மட்டும் இல்ல, அங்க ஏதாவது அவன் கண்டிப்பா பிரச்சனையை பண்ணுவான், உங்கள அவமானப்படுத்துவான், அது எங்களுக்கு சங்கடமா இருக்கும். வரவேணாம்" என்றாள் காயத்ரி.
"நீங்க பயப்படாதீங்க, ஒரு அசிங்கமும் நடக்காது, நான் பாத்துக்கறேன்" என்றான் பிரவீன்.
"விடு காயத்ரி...வரட்டும்" என்றாள் விஜி.
விஜிக்கு மனசுக்குள் மகிழ்ச்சி தான்.
மாலை......
பிரவீன் ரோஸெலின் கு நல்ல ஒரு விலை உயர்ந்த வெள்ளை நிற ஆடையும், முபாரக் கூறியதை போல விஜி, ரம்யா, காயத்ரிக்கு நல்ல சுடிதார்கள் வாங்கிக்கொண்டு காரில் பார்ட்டிக்காக பண்ருட்டி வந்தான்.
விஜி ரம்யா காயத்ரி மூவரும் பேருந்தில் வந்து பண்ருட்டி ஆர்ச் ஸ்டாப்பிங்கில் இறங்கினர்.
அங்கு ஏற்கனவே பிரவீன் வந்து காத்துக்கொண்டிருக்க
"விஜி, என்ன, இப்போ கோவம் தீந்துச்சா இல்லையா" என்றபடியே வரவேற்றான்.
"ஆச்சு ஆச்சு, ஆனா, இப்போ என்ன ஆகும் னு தான் பயமா இருக்கு" என்றாள் காயத்ரி.
"ஒண்ணும் பயப்பட வேணாம், வண்டி ல ஏறுங்க" என்றபடி காரின் கதவை திறந்துவிட்டான்.
இம்முறையும் ரம்யாவே முன்னாள் உட்கார்ந்தாள்.
கார் ரோஸெலின் வீட்டின் முன்பு வந்து நின்றது.
விஜிக்கும் காயத்ரிக்கு ஒரே நடுக்கம், எதுவும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்று பிரார்தித்துக்கொண்டனர்.
பிரவீனை பார்த்த டேவிட், அவனது டீம் ஆட்கள் அனைவருக்கும் அவனை காட்டி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான்.
இதை கவனித்த விஜியும் காயத்ரியும் பிரவீனிடம்,"பிரவீன், நாங்க தான் சொன்னோமே அவனுங்க உங்கள தான் ஏதோ காமிச்சு காமிச்சு பேசிட்டு இருக்காங்க, கொஞ்சம் அமைதியா இருந்துக்கோங்க, ப்ளீஸ், ரம்மி, நீ பிரவீன் கூடவே இரு" என்று ரம்யாவை ப்ரவீனுக்கு காவலாக வைத்துவிட்டு நண்பர்கள் குழுவுடன் ஐக்கியமாயினர் விஜியும் காயத்ரியும், ஆனால் மனதில் இருந்து நடுக்கம் அடங்கவே இல்லை இருவருக்கும்.
சற்று நேரத்தில் பார்ட்டி தொடங்கியது. கேக் வெட்டி கொண்டாடியபின் அந்தாக்ஷரி நடக்கவே எல்லோரும் தங்கள் பாடும் திறமையை காட்டிக்கொண்டிருந்தனர்.
பிரவீனை பாடும்படி விஜியும் காயத்ரியும் கேட்டுக்கொள்ளவே பிரவீன், ஒரு அருமையான பாடல் பாடினான். அனைவரும் மெய்சிலிர்த்துவிட்டனர்.
ஏதும் நடப்பதற்குள் கிளம்பி விட வேண்டும் என்ற நோக்கில், மூவரும் கிளம்பவே, ப்ரவீனும் கிளம்பினான்.
"விஜி, வளவனூர் ல டிராப் பண்ணனுமா" என்றான் பிரவீன்.
"இல்ல பிரவீன், எங்களை பண்ருட்டி ஸ்டாப்பிங் ல இறக்கி விட்ட போதும், இன்னிக்கு நீங்க பாரதிக்கு வருவீங்கன்னு அம்மாக்கு தெரியாது, இப்போ எங்களை கொண்டு விட்டீங்கன்னா சந்தேக பாடுவாங்க. அப்புறம் எந்த அகேஷனுக்கும் பர்மிஷன் தர மாட்டாங்க. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க" என்றாள் விஜி.
"ம்ம், ஓகே ஓகே, பண்ருட்டி பஸ் ஸ்டாண்ட் ல இறக்கி விட்டுடறேன், இல்லன்னா ஒண்ணு பண்ணலாம், நான் நைட் விழுப்புரம் ல தான் ஸ்டே பண்றேன், காஸ்மா பாலிடன் க்ளப் அகமோடேஷன் ல, சோ, உங்கள கோலியனூர் கூட்ரோட்டில இறக்கி விடறேன்" என்றான் பிரவீன்.
"வேணாம், நீங்க கிளம்புங்க, கோலியனூர் ல தெரிஞ்சவங்க யாரவது பாத்தா வீட்ல சொல்லிடுவாங்க" என்றாள் விஜி.
புரிந்துகொண்டான் பிரவீன். அவர்களை பேருந்தில் ஏற்றி விட்டுவிட்டு அவர்களுக்காக முபாரக் வாங்கி தர சொல்லிய ஆடைகளை அவர்களுக்கு கொடுத்துவிட்டு அவர்களை மதினா பேருந்தில் ஏற்றிவிட்டுவிட்டு கிளம்பினான் பிரவீன்.
"இது ஏதுன்னு கேட்டா என்ன சொல்றது" என்றாள் காயத்ரி.
"சமாளிப்போம், பண்ருட்டி கொத்து சாவி டெக்ஸ்டைல் ல 50 % ஆபர் ல போட்ருந்தான் வாங்கினோம் னு சொல்லுவோம்" என்றாள் விஜி.
பேருந்தில் இவர்களிடம் பயணசீட்டு வாங்க சொல்லி கண்டக்டர் பணிக்க வில்லை, இவர்களாக கேட்டபோது "எங்க ஓனரோட கெஸ்ட் மா நீங்க, போன் பண்ணி சொல்லிட்டாரு" என்றான் கண்டக்டர் கணபதி.
"ஹலோ, நீங்க தப்பா புரிஞ்சுது இருக்கீங்க, உங்க ஓனர் யாருன்னே எங்களுக்கு தெரியாது" என்றாள் காயத்ரி.
"இல்ல மேடம், நீங்க மூணு பெரும் விஜி காயத்ரி ரம்யா தான, நீங்க தான் எங்க ஓனர் கெஸ்ட்" என்றான் கணபதி.
"யோவ், யாரு யா உங்க ஒனறு, போன் போடு அவருக்கு, என்ன வெளாடுறீங்களா?" என்றாள் விஜியை.
"ஒரு நிமிஷம்" என்றபடி போன் போடு கொடுத்தான் கணபதி.
"ஹலோ.... சொல்லு டா கணபதி " எதிர்முனையில் இருந்து குரல் வந்தது.
"ஹலோ, நீங்க யாரு, நாங்க என்ன உங்க கெஸ்ட், எதுக்கு எங்ககிட்ட டிக்கெட் வாங்க மாற்றாரு உங்க கண்டக்டர்" என்றாள் விஜி.
"ஹலோ ஹலோ....யாரு விஜி யா? நான் ரியாஸ் பேசறேன், பிரவீன் பிரென்ட், " என்றான் ரியாஸ்.
"ஓ ரியாஸ் அண்ணன, அண்ணா, இது உங்க பஸ் ஆஹ்?" என்றாள் விஜி.
"ஆமாம் மா, நாங்க எங்க ரூட் கடலூர் டு பண்ருட்டி , பண்ருட்டி டு விழுப்புரம், விழுப்புரம் டு பாண்டிச்சேரி வெச்சுருக்கோம் மா, பிரவீன் தான் சொன்னான், நம்ம பஸ் ல தான் போறீங்கன்னு, அதான் பசங்க கிட்ட நம்ம கெஸ்ட் னு சொன்னேன்.இப்போ வண்டி கூட்ரோடு போனதும் அங்க நம்ம பாண்டி ரூட் வண்டி நிக்கும், அதுல ஏறி வளவனூர் ல இறங்கிக்கொங்க, அதுலயும் சொல்லிட்டேன், நைட் நேரத்துல லேடிசா போறீங்க, அதான் சேஃப்ட்டிக்காக",பத்திரமா போயிடு வாங்க, போய் செந்துட்டு எனக்கோ ப்ரவீனுக்கோ போன் பண்ணுங்க, இந்த நம்பர் என்னோடது தா, இதை சேவ் பண்ணிக்கோங்க" என்றபடி போனை கட் செய்தான் ரியாஸ்.
விஜி என்ன பேசுவதென்றே தெரியாமல் திகைத்துப்போனாள். இத்தகைய நண்பர்களின் வரவு அவள் வாழ்க்கையில் ஒரு ரம்மியமான சூழலை உருவாக்குவதாக நம்பிக்கை தருவதாக உணர்ந்தாள். ரியாஸின் அலைபேசி எண் விஜி மற்றும் காயத்ரியின் கைப்பேசிகளில் ஒரு அங்கமானது.
வளவனூர் அடைந்ததும் ரியாஸுக்கும் ப்ரவீனுக்கும் கால் செய்யப்பட்டது.
ரியாஸுக்கு காயத்ரி போன் செய்து வளவனூர் வந்து சேர்ந்துவிட்டதாக கூறினாள். அதே நேரம் விஜி ப்ரவீனுக்கு போன் செய்து வளவனூர் வந்துவிட்டதாக கூறினாள்.
"சரி விஜி, டேக் கேர், குட் நைட், நாளைக்கு கண்டிப்பா மேட்ச் பாக்க வரணும்" என்றான் பிரவீன்.
"நான் தான் சொன்னேனே, வில் ட்ரை, பட் நாட் கன்பார்ம், பட் ஒன் திங் பிரவீன், உங்க பிரெண்ட்ஷிப் கெடச்சது எனக்கு எவ்ளோ பெரிய பாக்கியம், டே பை டே நீங்க என் மனசுல ஆழமா பதிஞ்சுகிட்டே இருக்கீங்க, உங்ககூட பழகறதுல ரொம்ப கம்போர்ட்டா பீல் பண்றேன், தேங்க்ஸ் பார் எவரித்திங்" என்றாள் விஜி.
விஜி மனதிலிருந்து வந்த வார்த்தைகளால் சந்தோஷமடைந்தான் பிரவீன்." உங்க பிரெண்ட்ஷிப் கிடைக்க நானும் ரொம்ப லக்கி தான் விஜி, நீங்க ரம்யா காயத்ரி ரோஸெலின் எல்லாரும் ரொம்ப நல்ல பிரெண்ட்ஸ், எஸ்பெஷலி நீங்க....ஓகே, சி யு டுமாரோ ....ஐ ஹோப்" என்றபடி போனை கட் செய்தான் பிரவீன்.
பத்து நிமிடங்கள் கழிந்திருக்கும்......
விஜியிடம் இருந்து, "மிஸ்ஸிங் யு" என்று மெசேஜ் ப்ரவீனுக்கு வந்தது.
பகுதி 22 முடிந்தது.
------தொடரும்-----------------